Load Image
Advertisement

உலக பணக்காரர்கள் பட்டியல்: 3வது இடத்திற்கு முன்னேறினார் அதானி

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி: உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 3வது இடத்தை பிடித்துள்ளார். ஆசியாவை சேர்ந்த ஒருவர் 3வது இடத்திற்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.


இது தொடர்பாக வெளியான ப்ளூம்பெர்க் பில்லியனர் பட்டியலில், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவர் 251 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்து அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெப் பெஜோஸ் 153 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.


இதற்கு அடுத்து 3வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 137 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார். இவர், பிரான்சை சேர்ந்த லூயி உய்ட்டன் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி 3வது இடத்தை பிடித்துள்ளார்.


இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, சீனாவை சேர்ந்த கோடீஸ்வரர் ஜாக் மா உள்ளிட்ட ஆசிய பணக்காரர்கள் கூட இதுவரை 3வது இடத்தை பிடித்தது கிடையாது.

Latest Tamil News
அதானி குரூப் நிறுவனத்தின் துணை நிறுவனராக கவுதம் அதானி உள்ளார். இந்தியாவில் உள்ள முக்கியமான துறைமுகங்களை இந்த நிறுவனம் தான் நிர்வகித்து வருகிறது. நிலக்கரி வணிகத்திலும், இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த 2021 மார்ச் 31 அன்றுடன் முடிவடைந்த ஆண்டில், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் 5.3 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதானி, நிலக்கரி சுரங்கம் துணைமுகங்கள் மட்டுமல்லாது, சிமென்ட், மின்சாரம், விமான நிலையங்கள், ஊடகங்கள் எனப் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (44)

  • Karthikeyan - Trichy,இந்தியா

    ,,,,....

  • Karthikeyan - Trichy,இந்தியா

    ,,,,

  • அன்பு - தஞ்சை,கனடா

    ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படவேண்டிய தருணம் வந்துவிட்டது. விரைவில் அதானி முதல் இடத்தை பிடிப்பார். இதனால் இந்தியாவிற்கும் இந்தியர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்டத்தினமாக அமையும்.

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    டுமிழன்களை பொறுத்தவரை அம்பானி, அதானி, டாடா இவர்களெல்லாம் கார்பொரேட் முதலாளிகள். ஆனால் தமிழகத்தின் முதல் பணக்காரர் மற்றும் இந்தியாவின் நாற்பதாவது பணக்காரர் பன் நெட்ஒர்க்கின் முதலாளி கேடி பிரதர்ஸ் கலாநிதி மாறன் பெட்டிக்கடை வைத்து பொறி உருண்டை வியாபாரம் செய்பவர். ஹி...ஹி...ஹி...

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    அதுல பாருங்க இங்கு வந்து அம்பானிக்கு அதானிக்கு எதிராக உருட்டும் டுமிழன்கள் ஒரு பயலும் மருமகன் பங்களா வீட்டை பற்றியோ, அவர் அணியும் மூன்று கோடி மதிப்புள்ள வாட்ச் பற்றியோ, கணியக்காவின் டீ எஸ்டேட் பற்றியோ. உதைணாவின் அடாவடி சினிமா தொழில் பற்றியோ வாயை திறக்கமாட்டான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்