Load Image
Advertisement

தனித்துவத்தை இழக்கிறது தமிழக காவல் துறை: அண்ணாமலை

Tamil News
ADVERTISEMENT
சென்னை : 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், காவல் துறை தனித்தன்மையை இழக்க துவங்கி விட்டது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கை: பண்டிகை நாள், திருமண நாள் என்று எந்த நாளாக இருப்பினும், மக்களை காக்கும் பணியில் தம்மை முழுதுமாக ஈடுபடுத்தி கொண்டுள்ள மக்கள் குறைதீர்ப்பாளர்கள், காவல் துறை நண்பர்கள்.சவாலான வழக்கை கையாளுவதிலும், மக்களிடையே அமைதி நிலவவும், தமிழக காவல் துறைக்கு நிகரானது வேறு எதுவும் இல்லை.


தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், காவல் துறை தனித்தன்மையை இழக்க துவங்கி விட்டது. காவல் துறை கோபாலபுர குடும்பத்திற்கும், அமைச்சர்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை கையாளும் ஏவல் துறையாக மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க.,வினர், காவல் துறையினரை தரம் தாழ்த்தி நடத்துகின்றனர்.

Latest Tamil News
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், ஓய்வுபெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் காவல் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களுக்காக, ஒரு ஆணையத்தை அமைத்தது. பின், சி.டி.செல்வத்தின் வாகனம் தாக்கப்பட்டது, சட்டம் - ஒழுங்கின் நிலைமையை வெட்ட வெளிச்சமாக்கியது.


பல மாதங்களாகியும், ஆணையம் எந்த ஒரு அறிக்கையையும், அரசுக்கு சமர்ப்பித்ததாக தெரியவில்லை. ஆணையத்தின் தற்போதைய நிலையை, மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதன் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்க, அரசு வழிவகை செய்ய வேண்டும்.


சாமானிய மக்களின் அரணாகவும், நாட்டின் சட்டத்தை தாங்கி பிடிக்கும் துாணாகவும் இருப்பது, காவல் துறை. அரசியல் குறுக்கீடு இன்றி, காவல் துறையினர் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை உருவாக்குவது காலத்தின் கட்டாயமும், அரசின் கடமையும் ஆகும்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (35)

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    உண்மைதான். ஒரு காலத்தில் தமிழக காவல் துறை போலீசுக்கு இணையாக இருந்தது. இப்போ ஜீரோ.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    தனித்துவம் என்று இருந்திருக்கிறது காவல் துறைக்கு தமிழகத்தில். தமிழக காவல் துறை is a 'caged parrot' of திமுக.

  • ThiaguK - Madurai,இந்தியா

    இதற்க்கு ஒரே தீர்வு நீங்கள் காவல் அதிகாரி ஆகி எல்லா நிர்வாகத்தையும் பார்த்து கொண்டால்தான் உண்டு

  • raja - Cotonou,பெனின்

    அதிமுக ஆட்சியில் நெஞ்சை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வை பார்த்த சை. பாபு இப்போ திருட்டு தீயசக்தி ஆட்சியில் ஓங்கோல் கொள்ளையன் குடும்பத்துக்கு கொத்தடிமையாக மாறி கூனி குறுகி ச்சய் பாபுவாக பெயரெடுத்து விட்டார் ...

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    ,,,,,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up