கிணற்றில் விழுந்தாலும் காங்., கட்சியில் இணைய மாட்டேன்: நிதின் கட்கரி
புதுடில்லி: கிணற்றில் விழுந்து குதித்து இறந்தாலும் காங்., கட்சியில் இணைய மாட்டேன் என்று மத்திய அமைச்சர் நிதின் மகாராஷ்டிராவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகையில் குறிப்பிட்டார்.

நாக்பூரில் நடைபெற்ற தொழில் முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு நிதின் கட்கரி கூறியதாவது:
நீ மிகவும் நல்லவன். ஆனால் தவறான கட்சியில் இருக்கிறாய். சிறப்பான எதிர்காலத்துக்காக, தன்னை காங்கிரஸ் கட்சியில் இணையுமாறும், எனது நண்பர் ஸ்ரீ காந்த் கூறினார்.

அதற்கு, கிணற்றில் விழுந்து குதித்து இறந்தாலும் இறப்பேனே தவிர கட்டாயமாக காங்., கட்சியில் இணைய மாட்டேன். காங்., கட்சியின் கொள்கை எனக்கு பிடிக்கவில்லை. ஒரு தனிநபராக இருந்தாலும், வணிகமாகவோ சமூகப் பணியாகவோ, அரசியலாகவோ இருந்தாலும் கூட மனிதத் தொடர்பு என்பதுதான் மிகப்பெரிய பலம் என்று மத்திய அமைச்சர் நிதின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (24)
காங்., கட்சியில் இணைய மாட்டேன் என்று கூறியதற்கு பதில், பாஜாகாவை விட்டு என்றும் விளகமாட்டேன் என்றுதானே இவர் கூறி இருக்கவேண்டும். காங்., கட்சியில் இணைய மாட்டேன் என்று கூறியதால், பாஜாகாவிற்கும் இவருக்கும் ஏதோ மனக்கசப்பு உள்ளதாக தோன்றுகிறது.
இன்னும் இரண்டு வருடங்களில் மோடிக்கு எழுபத்தைந்து வயதாகிவிடும். பிஜேபி கொள்கைப்படி, அடுத்தகட்ட தலைவர்கள் தான் தலைமை பொறுப்பையேற்க வேண்டும். அதன்படி கட்காரி தான் அடுத்த பிஜேபி பிரதமர்.
அடுத்த பிரதமரே நீங்கள் தானே.
.........
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
ஐயோ இந்த ஆளு வந்தா மராத்திக்காரங்க தான் எல்லா இடத்திலும்