ஜி.ஹெச்.,ல் போலி மருத்துவர்கள் கைது
சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியரை மிரட்டிய போலி மருத்துவர் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், சித்தனுார் அருகே, தளவாய்பட்டியை சேர்ந்த, குணசேகரன் மகன் கார்த்திகேயன், 23; கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பத்தை சேர்ந்த ரியாஸ் மகன் சல்மான் ரியாஸ், 23. இருவரும், 'பேஸ்புக்' மூலம் நண்பர்களாகினர். இருவரும் சேர்ந்து மருத்துவராக மாற திட்டமிட்டனர். ஸ்டெதஸ்கோப், கோட் சகிதமாக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, கண் சிகிச்சை பிரிவுக்கு நேற்று மதியம், 12:30 மணிக்கு வந்தனர்.
பணியில் இருந்த செவிலியரிடம், 'டிஸ்சார்ஜ்' நோயாளிகள் பட்டியலை கேட்டனர். தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்களை மிரட்டினர்.
சந்தேகமடைந்த செவிலியர்கள் இருவரையும் பிடித்து, ஆர்.எம்.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரித்ததில் போலி அடையாள அட்டையை காட்டியதோடு, மிரட்டும் தொணியில் பதிலளித்தனர். இருவரையும் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாரளிக்கப்படவே, இருவரையும் போலீசார் கைது
செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!