Load Image
Advertisement

ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.1.74 லட்சம் கோடி வைப்புத்தொகை: நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: பிரதமர் யோஜனா ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.1.74 லட்சம் கோடி வைப்புத்தொகை இருப்பதாக மத்திய நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
Latest Tamil News

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: பிதரமராக மோடி கடந்த 2014 ம் ஆண்டு பதவி ஏற்ற பின்னர் அன்றைய சுதந்திர தின உரையின் போது அறிவித்த படி மக்கள் அனைவரும் வங்கி கணக்கை துவக்கும் வகையில் பிரதமர் யோஜனா ஜன்தன் என்ற பெயரில் வங்கி கணக்கு துவக்கப்பட்டது.

ஒவ்வொரு குடும்பம் என்பதில்இருந்து ஒவ்வொரு பெரியவர் என்பதற்கு கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் ரூபே கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் பேமெண்டுகளை ஊக்குவிக்குகிறது.

வங்கி கணக்குடன் ஆதார் மற்றும் மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நேரடி வருமான ஆதாயம் மற்றும் பி.எம் காரிப் கல்யாண் திட்டத்தின்மூலம் பெண்களுக்கு வழங்கப்படும் தொகை தங்கு தடையில்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படுகிறது. என கூறினார்.
Latest Tamil News
மேலும் பிரதரின் ஜன்தன் யோஜனா திட்டம் துவங்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகின்றன. இந்த திட்டம் மூலம் 46 கோடிக்கும் அதிகமான வங்கி கணக்குள் துவக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் 67 சதவீதம் பேரும் நகர்ப்புறங்கள் மற்றும் பெண்கள் உட்பட 56 சதவீதம் பேரும் ஜன்தன் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இந்த கணக்கின் மூலம் 1.74 லட்சம் கோடி ரூபாய் வைப்புத் தொகை உள்ளது. என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.


வாசகர் கருத்து (4)

  • mahehkumar11 - chennai,இந்தியா

    என்ன பேசுகிறீர்கள் என்று எங்களுக்கு புரியவில்லை. விலைவாசியை குறைத்து விட்டு நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம். வேறு கதையெல்லாம் வேண்டாம்.

  • amuthan - kanyakumari,இந்தியா

    அந்த மினிமம் பேலன்ஸ் இல்லை என்று வங்கிகள் எடுத்த பணத்தை எப்போது தருவீர்கள்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இதனுடன் ஒப்பிட்டால் திராவிடியல் அரசு ஒரு ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி சாராயம் விற்று லாபம் சம்பாதித்து பல குடும்பங்களை கெடுத்து நடுத்தெருவில் நிறுத்துகிறார்கள்.

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    வரி அமைச்சர் சொல்லும் வைப்புத்தொகையை எடுத்து மக்கள் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement