உண்மையான வளர்ச்சிக்கு தி.மு.க., பாடுபட வேண்டும்: அண்ணாமலை
சென்னை-'இனியும் அரசியல் லாபத்திற்காக மக்களை திசை திருப்பாமல், தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்காக, தி.மு.க., பாடுபட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருவித நிலைப்பாடு; ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்து, தி.மு.க., மக்களை குழப்பத்தில் தள்ளியுள்ளது.தி.மு.க., ஆட்சியில் ஓராண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில், மாற்று குடியிருப்புகள் கொடுப்பதற்கு முன் வீடுகள் இடிக்கப்பட்டதை, பரந்துார் மக்கள் பார்த்திருப்பர்.
அதனால் தான் இன்று, புதிய விமான நிலையத்திற்காக பரந்துாரில் நிலம் எடுக்கப்படும்போது, 'மாற்று நிலம் வழங்குகிறோம்; இழப்பீடு கொடுக்கப்படும்' என்று கூறும் வாக்குறுதிகளை நம்ப, மக்கள் தயாராக இல்லை.தமிழகத்தில் குறைந்து வரும் முதலீடுகளை கண்ட பிறகாவது, இனியும் அரசியல் லாபத்திற்காக மக்களை திசை திருப்பாமல், தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்கு தி.மு.க., பாடுபட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அவரது அறிக்கை:முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில், நாட்டின் பெரு நகரங்களை இணைக்க, தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்பட்டன. அதேபோன்ற திட்டம் தான், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'எட்டு வழிச்சாலை திட்டம் விவசாயிகளுக்கு பாதகமானது' என்றார். இன்று அவரது அமைச்சர் வேலு, 'பச்சை துண்டு போட்டவன் எல்லாம் விவசாயி இல்லை' என்று போராடுபவர்களையும், விவசாயிகளையும் கொச்சைப்படுத்தி விட்டார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒருவித நிலைப்பாடு; ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்து, தி.மு.க., மக்களை குழப்பத்தில் தள்ளியுள்ளது.தி.மு.க., ஆட்சியில் ஓராண்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில், மாற்று குடியிருப்புகள் கொடுப்பதற்கு முன் வீடுகள் இடிக்கப்பட்டதை, பரந்துார் மக்கள் பார்த்திருப்பர்.

அதனால் தான் இன்று, புதிய விமான நிலையத்திற்காக பரந்துாரில் நிலம் எடுக்கப்படும்போது, 'மாற்று நிலம் வழங்குகிறோம்; இழப்பீடு கொடுக்கப்படும்' என்று கூறும் வாக்குறுதிகளை நம்ப, மக்கள் தயாராக இல்லை.தமிழகத்தில் குறைந்து வரும் முதலீடுகளை கண்ட பிறகாவது, இனியும் அரசியல் லாபத்திற்காக மக்களை திசை திருப்பாமல், தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்கு தி.மு.க., பாடுபட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (23)
நீ ராணுவ வீரரின் மரணத்தில் அரசியல் லாபம் பார்க்க முயற்சித்த ஆளச்சே....
'இனியும் அரசியல் லாபத்திற்காக மக்களை திசை திருப்பாமல், தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்காக, பிஜேபி., பாடுபட வேண்டும்" என்று சொல்லும் தைரியம் இருக்கா ...
சிலைகள் பேனா வரை வைப்பது புரிந்துணர்வு ஒப்பந்த தொழில்கள் இவையெல்லாம் வளர்ச்சி தானே சிலர் தன் சொந்த பணத்தில் சாலை அமைக்கிறார்கள் பொது நல வளர்ச்சி
ஆட்டுக்குட்டின்றது சரியாத்தான் இருக்கு... அவங்களால முடியாததை செய்யச் சொல்றாரே?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பரக்கத் அலி, இந்தோனேசியா தான் ஒரு செம்மறி ஆடு என்பதை நிரூபிக்கிறார். உலகமே கொன்டாடும் நமது பிரதமரையும் அவரது ஆட்சியையும் பாராட்டை உங்களுக்கெல்லாம் எப்படி மனம் வரும். அண்ணாமலை அவர்கள் அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டார் என தெரியப்படுத்துங்கள். நீர் வெங்காயத்தின் இரண்டாவது அடுக்கு என நிரூபிக்கின்றீர்கள்.