Load Image
Advertisement

எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பான இடத்தில் ‛பதுக்கி வைத்த சோரன்

Tamil News
ADVERTISEMENT

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ., பதவியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளதாக, தகவல் வெளியான நிலையில், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


ஜார்க்கண்டில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, 30ல் வென்றது. காங்கிரஸ், 17 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஒரு தொகுதியிலும் வென்றன. இந்தக் கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைத்துள்ளன. முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார். பா.ஜ., 26 தொகுதிகளில் வென்றது.


இந்நிலையில், நிலக்கரி சுரங்கத்துக்கான ஒதுக்கீட்டை தன் பெயரிலேயே ஹேமந்த் சோரன் பெற்றுள்ளதாக பா.ஜ., குற்றஞ்சாட்டியது. 'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி இது குற்றமாகும். அதனால், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, கவர்னர் ரமேஷ் பைசிடம் பா.ஜ., சார்பில் மனு கொடுக்கப்பட்டது .இது பற்றி தேர்தல் கமிஷனின் கருத்துக்களை கவர்னர் கேட்டிருந்தார். தேர்தல் கமிஷன் தன் பதிலை நேற்று கவர்னருக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, மாநில கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்து கவர்னர் ரமேஷ் பைஸ் இன்று(ஆக.,27) அறிக்கை அனுப்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.
Latest Tamil News

இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஹேமந்த் சோரன், கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுடன் தனது வீட்டில் பல முறை ஆலோசனை நடத்தினார். இன்றும் ஆலோசனை நடந்தது. ஆலோசனை முடிந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சொகுசு பஸ்சில் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹேமந்த் சோரனும் உடன் சென்றார். அவர்கள் அனைவரும் ராஞ்சி அருகே உள்ள குந்தி என்ற இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சொகுசு பங்களா ஒன்றில் தங்கி உள்ளனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மற்ற இடங்களுக்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் சத்யானந்த் போக்தா, அந்த இடம் எது என்பது தற்போது தெரியாது எனக்கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (8)

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  இதுபோன்ற படு கேவலமான அரசியல் இந்திய நாட்டில்மட்டும்தான் நடக்கும். புலி, சிங்கம் போன்ற மிருகங்களைத்தான் கூண்டில் சிறை வைப்பார்கள். ஆனால் இந்தியாவில் அரசியல் மிருகங்கள்.

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  சோர்வே அடையாத சோரன் தனது ஊழல் பிடித்த அதே நிலக்கரி சுரங்கத்துக்குள் அவரது கட்சுஹி எம், எல்.க்களை அழைத்துச்சென்று மறைத்திறகு வைப்பர் சில காலம். வெளியே வரும்போது எல்லாருக்கும் கையில் நிலக்கரி கட்டி கொடுத்து தனது கட்சியில் இருக்க ஏற்பாடு செய்வார்.

 • DVRR - Kolkata,இந்தியா

  ஷிபு சோரன் (முன்னாள் ஜார்கண்ட் முதல்வர்) பைய்யன்????இது தான் நமது நாட்டின் தலைவிதி அதாவது தலையாய விதி. அரசியல் நடிகர் / நடிகையர் வாரிசுகள் அறிவு இருக்கோ இல்லையோ ஹீரோவின் பைய்யன் ஹீரோ அரசியலில் முதல்வரின் பைய்யன் முதல்வர். ஆனால் டாக்டர்/என்ஜினீயர்/வக்கீல் பைய்யன் படிக்காமல் டாக்டர்/என்ஜினீயர்/வக்கீல் ஆகமுடியாது???ஏன்????

 • duruvasar - indraprastham,இந்தியா

  ஜி ஸ்கொயர் தங்களை வரவேற்கிறது.

 • raja - Cotonou,பெனின்

  , நிலக்கரி சுரங்க உரிமையையும் திருப்பி கொடுத்து விட்டால் புனிதராகி விட மாட்டாரா... ,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up