ADVERTISEMENT
புதுடில்லி: உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுக்கொண்டார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரமணா ஓய்வு பெற்றார். இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் 49வது நீதிபதியாக யு.யு.லலித் நியமிக்கபட்டார்.

ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று(ஆக.,27) பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கும் லலித் நவ.,8 ல் ஓய்வு பெற உள்ளார். 1957 ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த அவர், 1983 ல் வழக்கறிஞராக பணியை துவக்கினார்.
வாசகர் கருத்து (8)
லலித் மோடியாக இல்லாமல் இருந்தால் சரி
வலுவுமா? வழுவுமா? இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா மன்னரே
இவரின் விசித்திரமான தீர்ப்பு ஏற்கனவே பிரசித்தம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
இவர் 74 நாள் தான் ,
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தலைமை நீதிபதி பதவிக்காலம் ஒரு பெரிய கேள்விக்குறி???இவ்வளவு பெரிய பதவிக்கு வரும்போது அவர்கள் பதவிக்காலம் குறைந்த பட்சம் 2 வருடத்திற்கு மேலாகி இருக்க வேண்டும் அப்போது தான் அவர்கள் ஏதோ சிறிதளவில் அந்தநீதிமன்ற நடைமுறையில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்து அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆய்வு செய்து (திமுக வாய்வு அல்லவே அல்ல) அந்த மாற்றத்தை நல்வழியில் செல்லவைக்க முடியும். இவர் பதவி வெறும் நவம்பர் வரை தான்????