பறவைகள் சரணாலயத்தில் பஸ் நிலையம் கட்டுமானம்: வனத் துறையினர் அதிர்ச்சி

இதன்படி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வெளியில், சூழல் முக்கியத்துவ பகுதியை மறுவரையறை செய்ய, கடந்த ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், புதிய அமைச்சர், செயலர் ஆகியோர் நேரடியாக தலையிட்டு, இந்த முயற்சியை கைவிட நடவடிக்கை எடுத்தனர். இதனால், வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பாதுகாப்பு ஏற்பட்டது.
புதிய சிக்கல்
இந்நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் முகப்பு பகுதி வளாகத்தில், புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கு, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் முடிவு செய்தனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், இப்பணியை மேற்கொள்ள முடிவு செய்து, இதற்கான பூமி பூஜையும் நடந்துஉள்ளது.வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில், எவ்வித அனுமதியும் இன்றி, புதிய கட்டுமானத்துக்கான அடிக்கல் நாட்டும் பணி நடந்துள்ளது.இப்புதிய கட்டுமானத்தால், வேடந்தாங்கல் சரணாலயத்தின் சூழலியல் அமைப்பு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பறவைகள் ஆர்வலர்கள் கூறியதாவது:கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பாதிப்பை, தற்போதைய ஆட்சியாளர்கள் தடுத்தனர். இதனால் ஏற்பட்ட நிம்மதியை குலைக்கும் வகையில், புதிய பஸ் நிலைய பணி துவக்கப்படுள்ளது.உள்ளூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு விளம்பரம் தேடுவதற்காக, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் விதிகளை மீறி, புதிய பஸ் நிலையம் அமைக்க முயற்சிக்கின்றனர்.
முதல்வர் தலைமையிலான மாநில வன உயிரின வாரிய அனுமதி, சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் நடக்கும் இப்பணியை, வனத் துறை அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும். ஏற்கனவே, தண்ணீர் வரத்து தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய நிலையில், இந்த புதிய பிரச்னை கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (7)
ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி உத்தரவுபடி நடக்கிறது ஸ்டாலின் எப்படி தலையிடமுடியும். யோசியுங்க , அதிர்ச்சி நீங்கும்.
யானைகள் வழித்தடத்தில் சத்குரு ஆஸ்ரமம் அமைத்தபோது ஆனந்த கூத்தாடியவர்களுக்கு இப்போது அதிச்சியா. கேட்கவே எனக்கு அதிர்ச்சியா இருக்கு.
பறவைகளுக்கு இலவச பஸ் பிரயாணம்னு சொல்லிடுங்க. ஆர்வலர்கள் அமைதியாயிடுவாங்க. ஏதாவது இலவசம் யாருக்காவது குடுக்கணும் அவ்ளோதான்.
வேடந்தாங்கலில் நான் வாழ்ந்தவன். பஸ் நிலையத்தால் பறவைகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. சும்மா அரசியலுக்காக இதை ஊதி உலை வைத்து பொங்குகிறார்கள்.
விடியலை இனிமே (உயிர் மேல ஆசை இருந்தா) நீங்க கேள்வி கூட கேட்க முடியாது .....