Load Image
Advertisement

கொலையை முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  கொலையை முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
ADVERTISEMENT
சத்திரப்பட்டி-திண்டுக்கல் மாவட்டம் பழநி சத்திரப்பட்டியில் பிப்.,27 ல் நடந்த பைனான்ஸ் அதிபர் ஓமந்துாரார் 45, கொலை வழக்கை முறையாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


சத்திரப்பட்டி முல்லைநகரை சேர்ந்த ஓமந்துாரார் கேரளாவில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர் பிப்., 27 ல் மது அருந்தி விட்டு மனைவி பாண்டீஸ்வரியை 37, அடித்தார். இதை பார்த்த அவரது 17 வயது மகன் கிரிக்கெட் மட்டை, இரும்பு தடியால் ஓமந்துாராரை தாக்கியதில் இறந்தார். சிறுவனை சத்திரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.


இதற்கிடையில் வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா தலைமையிலான போலீசார் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்கும் விதம் செயல்படுவதாகவும், ஓமந்தாராரின் கொலை குறித்து முறையான விசாரணை நடக்கவில்லை எனவும் ஓமந்துாராரின் தந்தை ரங்கசாமி மேலதிகாரிகளுக்கு புகார் அளித்தார்.


எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவின்படி பழநி மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கவிதா நடத்திய விசாரணையில் ஓமந்துாரார் மனைவி பாண்டீஸ்வரி 37, அவரது உறவினர்கள் தாசிரிபட்டி கிருஷ்ணவேணி 55, மதுரை ராமையா 62, லட்சுமி 50, ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது. ஆக., 5 ல் அவர்களை போலீசார் கைது செய்தனர்.


இது தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடந்தது. கொலை வழக்கை முறையாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபாவை ஐ. ஜி., அஸ்ரா கார்க் உத்தரவின்படி டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா சஸ்பெண்ட் செய்தார்.


வாசகர் கருத்து (4)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சஸ்பெண்டு பத்தாது. பிறகு சிறையில் போட வேண்டும்.

  • duruvasar - indraprastham,இந்தியா

    மத்திய அரசு கொடுத்த அழுத்தம். தான் காரணம். சும்மா அடிச்சு வுடலாம்.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    "குடிப்பழக்கம் உள்ள இவர் பிப்., 27 ல் மது அருந்தி விட்டு மனைவி பாண்டீஸ்வரியை 37, அடித்தார்"

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement