ஸ்டெர்லைட் ஆலை மூடலால் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு
உச்ச நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் அளித்துள்ள தீர்ப்புகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார விளைவுகள் என்ன என்பதை, இந்த அமைப்பு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. விரிவான ஆய்வுஇவ்விரு அமைப்புகளும் வழங்கிய ஐந்து தீர்ப்புகளின் விளைவுகளை பற்றி விரிவான ஆய்வை, இந்த அமைப்பு செய்து உள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஐந்து தீர்ப்புகளில் ஒன்று தான், ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு. அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின், துாத்துக்குடி, தமிழகம், இந்தியா மட்டுமல்ல; தாமிரத் தொழில் துறை, மக்கள் ஆகியோர் எவ்வளவு இழப்புகளை சந்தித்துள்ளனர் என்று விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு தரவுகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் இறுதியில், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார பாதிப்பு
அதில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் பற்றி கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2018 மத்தியில் இருந்து 2021 மத்தி வரையிலான, மூன்று ஆண்டு காலத்தில் குறைந்தபட்சம் 75 ஆயிரம் மக்கள் கடுமையாக பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ளனர். 16 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். அரசுக்கு 8,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தொகை திரட்டப்பட்டு, மூலதன செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி பணிகள் நடந்திருக்கும். இந்த தொழிற்சாலை அடைந்த இழப்பு மட்டும், 7,000 கோடி ரூபாய். பொது மக்கள் 500 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை இழந்தனர். மொத்தத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் --
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!