Load Image
Advertisement

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின்

 கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமின்
ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13ம் தேதி இறந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், பள்ளி தாளாளர் உள்ளிட்ட இந்த 5 பேருக்கும் ஜாமின் வழங்கி நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.


வாசகர் கருத்து (15)

  • Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா

    பெண்கள் என்றாலே மோகமாகத்தான் யார் வேண்டுமென்றாலும் பார்க்கின்றார்கள். படிக்கிற பொண்ணுங்க விடுதியில் தங்கி படிப்பது குற்றமா ? பொண்ணுங்க மீது மோகம் இந்தக்காலத்தில் எந்த வயதினருக்கும் வருகிறது - தப்பும் செய்யத்தூண்டுகிறது - தப்பு செய்து விடுகிறார்கள். படிக்கிற பொண்ணுங்களை பள்ளி தாளாளர், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகள் போல பார்க்காமல் முகமாக பார்த்து சின்னாபின்னமாக்கி தற்கொலை செய்ய வைக்கிறார்கள். அதிக வயதாகியும் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கிறேன். இந்த மாதிரி செயல்களை பார்க்கும் போது கல்யாணம் பண்ணி குழந்தைகள் பெற்று குறிப்பாக பெண் குழந்தைகள் பெற்று அவர்கள் வாழ்க்கை சீரழிவதற்கு பதிலாக கல்யாணம் பண்ணாமலேயே இருந்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. இந்தக்காலத்தில் தந்தை தானுடைய மகளையே, கல்லலாகாதலன் இன்னொருவன் மனைவியையும் அவளுடைய மகளையும், தாத்தா வயதில் உள்ளத்தவர் பெட்டகர்ஜியாக நினைக்கவேண்டிய பிள்ளைகளை என்று குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆசிரியை மாணவனிடம் ஈர்ப்பு. அக்கா வயதுடைய பெண்ணிடம் தம்பியாக இருக்கவேண்டியவன் முகமாக பார்த்து பழகி சீரழிகிறார்கள். காதலர்கள் என்று பெரிய கொடுமை நடந்துகொண்டே இருக்கிறது. அன்பு என்பதற்கு காதல் என்று மோகமாகப்பார்க்க யார் கண்டுபிடித்தார்கள் ? கொடுமைடா.

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    ……

  • JaiRam - New York,யூ.எஸ்.ஏ

    ஸ்கூல் பொண்ணு மாடிமேல இருந்து தற்கொலை பண்ணிக்கிட்டா ஸ்கூல் நடத்தறவர்கள் பொறுப்பா

  • M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா

    இனி மாணவிகள் எப்படி இறந்தாலும் அதற்கு பொறுப்பானவர்கள் கண்டிப்பாக விடுதலை செய்யப்படுவார்கள்.தனியார் பள்ளிகளுக்கு நல்ல செய்தி பெற்றோர்களுக்கு துக்க செய்தி அருமையான ஜாமின் வரலாற்று சிறப்புமிக்க ஜாமின் என்றே சொல்லலாம் விரைவில் இந்த வழக்கே தள்ளுபடியாகலாம் ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை.கலவரம் எப்படி நடந்தது என்ற வழக்கு தொடரும் அருமை அருமை என்ன ஒரு நேர்மை

  • Aruna Panchatsharam - Detroit,யூ.எஸ்.ஏ

    மிக கொடுமை . எல்லே பத்திரைகளும் இந்த செய்தியை வெளி இடுவதில்லை . நல்ல பாதுகாப்பு பெண்களுக்கு ,

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement