தஞ்சாவூரில் குறைகளை தெரிவிக்க கவுன்சிலர்களுக்கு மேயர் வாய்ப்பூட்டு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் வார்டு குறைகளை தெரிவிக்க கவுன்சிலர்களுக்கு வாய் பூட்டு போட்டு மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் தனது வார்டு மக்களின் குறைகளை தெரிவித்து பேசும் போது அதற்கு பதில் அளிக்க முடியாமல் மாநகராட்சி மேயர் ராமநாதன் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறி விட்டார்.
இதற்கு திமுக அதிமுக உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர், வார்டு மக்களின் பிரச்சினைகளை கூட தெரிவிக்க முடியாமல் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட வாய் பூட்டு தற்போது எந்த மாநகராட்சியிலும் இல்லாத நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த அறிக்கையால் 29ஆம் தேதி நடைபெறும் மாமன்ற கூட்டம் பரபரப்பாக காணப்படும் இருக்கும் என தெரிய வருகிறது.

இந்நிலையில் இந்த மாத மாமன்ற கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள நிலையிலே மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி சார்பில் சுற்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதில் வார்டு கவுன்சிலர்கள் தொகுதி மக்களின் குறைகளை தெரிவிப்பதற்கு கூட்டத்திற்கு முன்பாக எட்டு நாட்களுக்கு முன்பு தெரிவிக்க வேண்டும். மேயர் ஒப்புதல் பெற்றால் மட்டுமே அந்தப் பிரச்சினைகளை பேச முடியும், கேள்வியை அனுமதிப்பதா இல்லையா என்பதை மேயர் முடிவு செய்வார், என 13 கட்டளைகளை தெரிவித்துள்ளார்.
இதற்கு திமுக அதிமுக உள்ளிட்ட வார்டு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர், வார்டு மக்களின் பிரச்சினைகளை கூட தெரிவிக்க முடியாமல் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட வாய் பூட்டு தற்போது எந்த மாநகராட்சியிலும் இல்லாத நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ளது என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த அறிக்கையால் 29ஆம் தேதி நடைபெறும் மாமன்ற கூட்டம் பரபரப்பாக காணப்படும் இருக்கும் என தெரிய வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!