லோக்சபாவுக்கு 2014ல் நடந்த தேர்தலில் இருந்து காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. கட்சியில் அனைத்து நிலைகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் கட்சி தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதினர்.

இதையடுத்து, 'ஜி - 23' என்றழைக்கப்படும் இந்த அதிருப்தி தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். கட்சிக்கு நிரந்தர தலைமையை இவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஜம்மு - காஷ்மீரில் காங்., தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக, அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். ஆனால், சில மணி நேரங்களிலேயே அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லை என்று குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை கட்சி தலைவர் சோனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். 5 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கட்சியில் சேர்ந்தது முதல் தனது பணி, செயல்பாடுகள், முன்னாள் பிரதமர்கள் இந்திரா, ராஜிவ் ஆகியோருடன் பணியாற்றியது குறித்தும் விளக்கி உள்ள குலாம்நபி ஆசாத், ராகுலின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அவரின் குழந்தைத்தனமான செயல்பாடுகளே 2014 தேர்தல் தோல்விக்கு காரணம் எனக்கூறியுள்ளார்.

காங்கிரசில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், குஜராத் செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பஞ்சாப் மாநில காங்., முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் ஆகியோர் விலகிய நிலையில் தற்போது குலாம் நபி ஆசாத்தும் கட்சியில் இருந்து விலகியது சோனியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குலாம் நபி ஆசாத்தின் விலகல் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (45)
பாஜக இப்போது வலிமையான தேசியக் கட்சியாக, எதிர்க்கட்சி என்பதே இல்லாமல் மிருக பலமாக இருப்பதற்கு அக்கட்சியின் கொள்கை, உழைப்பு,திறமை, தொண்டர்கள் இவை எதுவும் காரணம் இல்லை. முக்கிய காரணம் பலவீனமடைந்து, சாகப் போகும் நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம். மக்களுக்கு வேறு சாய்ஸ், ஆப்ஷன் இல்லாததால் பாஜகவை வெற்றி பெறச் செய்கின்றனர்.இது நாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல.
துரியோதனன் எப்படி விதுரரை இழந்தானோ அது போல் காங்கிரஸ் குலாம் நபி ஆஜாத்தை இழந்து விட்டது.
உண்மையில் Rahul ஒரு வார்டு கவுன்சிலர் ஆக கூட லாயக்கு இல்லை. இவரால் பயன் அடைவது பிஜேபி மட்டும் தான். தொடரட்டும்.
எந்த ஆறு எங்கே ஓடினாலும் மக்கள் நலம் கோவிந்தா. 75 ஆண்டுகளில்,,,,, வளர்ச்சி, தொழினுட்பம் என்பது எல்லாம் சரி... அரசியல் அமைப்புக்கள் திரும்ப திரும்ப.... பதவி சுகம் கிடக்கதான் வேலை செய்வார்கள். .. என்ன செய்வது.
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் . காங்கிரஸ்க்காரர்கள் அந்தக் கட்சியை விட்டு விலகினால் பா ஜ க விற்கு அழிவு காலமா ? என்ன ஒரு அடிவருடித்தனம். விடியல் காரர்களை மனதில் கோயில் கட்டி கும்பிடும் வெட்டி ஆபிசர்களே பா ஜ க வினருக்கு இதனால் ஒரு பிரயோஜனமும் இருக்கப்போவது இல்லை . உங்களுக்குத்தான் லாட்டரி அடிக்கும். ஏன் என்றால் மோடி எதிர்ப்பாளர்கள் தியமுகவை முகஸ்துதி செய்து நல்லா ஆ .. உசுப்பேத்தி மாநில அரசியலில் இருந்து நகர்ந்து மத்திய அரசியலில் பங்கேற்க ஆசை காட்டி இழுத்து விடுவார்கள். நீங்களும் செட்டியாருடன் சேர்ந்து டெல்லி யில் அரசியல் செய்து நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்யும் போது இங்கே தமிழ் நாட்டில் டப்பா டான்ஸ் ஆடிடும் பாத்துக்கோங்க மக்களே