ADVERTISEMENT
புதுடில்லி: அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதி அளிக்கும் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வழக்கு இன்று (ஆக.,24) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‛தேர்தல் ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் மக்களிடம்தான் உள்ளது. வேட்பாளர்களையும், கட்சிகளையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். வாக்காளர்கள் கட்சியின் செயல்திறனை பார்த்து ஓட்டளிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அறிவிப்பதை எதிர்க்கும் பிரச்னையை ஆராய நிபுணர் குழு அமைக்கலாம்' எனக் கூறினர். மேலும், இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
வாசகர் கருத்து (50)
முதலில் களையெடுப்பு ரேஷன் கார்டில் தொடங்கினால் தமிழ்நாடு கடனிலிருந்து மீள முடியும். ன
போலி வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றலாம். ஆனால் இலவசமாக ஏதாவது கொடுத்து மக்களை முன்னேற விடக் கூடாது. நல்ல கொள்கை
மூணு நீதிபதிகளைக்கொண்ட ஒரு குழு என்ன, முப்பது குழு அமைத்தாலும் அவிங்க முப்பது விதமான தீர்ப்பு வழ்ங்குவார்கள்.
இலவசங்கள் இல்லாவிட்டால் நிறைய கட்சிகளின் ஆட்சி கனவு அவ்வளவுதான். அதனால்தான் பயப்படுகிறார்கள். சரி ஒரு 10 வருடங்கள் அவர்கள் ஆண்ட பின் குறைந்த பட்சம் மக்களை மீண்டும் கையேந்தாத நிலைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், நடப்பது என்ன? மீண்டும் மீண்டும் அதே இலவசங்கள் வழங்கப்படுகின்றன. இதிலிருந்து இவர்கள் ஓட்டுக்காக மட்டுமே இலவசங்களை அளிக்கிறார்கள் என்று எளிதாக புரிந்து கொள்ளலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கடைசி நாளின் போது கூட தீர்ப்பு வழங்காமல் வாய்தா வழங்கிம்கடமையை செய்துட்டார். இதுல நீதித்துறை மேலே நம்பிக்கை குறைந்து விடும்னு கவலையோட பேசுறாரு.