திமுக எம்எல்ஏ அசோக்குமார் அடித்தது ஒரே கல்லில் 6 மாங்காய்!: அண்ணாமலை

மொய் வாங்கும் கவுன்டர்கள், பணம் எண்ணும் இயந்திரம், உடனே வங்கிக் கணக்கில் சேர்க்க அதிகாரிகள் என்று குட்டி ரிசர்வ் வங்கி போல், மொய் வசூல் நடத்தப்பட்டுள்ளது. விருந்துக்கு வந்தவர்கள் அனைவரும், 1,000 ரூபாயில் துவங்கி, 5 லட்சம் ரூபாய் வரை வசதிக்கேற்ப மொய் செய்துள்ளனர்.
இது சத்தியமா, சாத்தியமா?
அங்கே தான் நிற்கிறது தி.மு.க.,வின் விஞ்ஞானபூர்வ ஊழல் திறமை. வீட்டில் அதிக கரன்சிகளை வைப்பது குற்றம். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்த வரித் துறை கேள்வி கேட்கும் என்று சாமானிய மக்களுக்கு சொல்கிறது சட்டம். ஆனால், அசோக்குமார் அடித்தது, ஒரே கல்லில் ஆறு மாங்காய். விஞ்ஞானபூர்வ வித்தைகள் காட்டும் வித்தகத்தில், தலைமையையே விஞ்சும் கைதேர்ந்த திறமைசாலிகள் தி.மு.க.,வினர்.
சமீபத்தில் தி.க., தலைவர் வீரமணிக்கு எடைக்கு எடை மக்கள் வழங்கும் கரன்சிகள் துலாபாரத்தில் வைக்கப்பட்டன. வீரமணி அமர்ந்த தராசை ஒருவர் முட்டிக்காலால் முட்டு கொடுத்த காட்சி, சமூக ஊடகத்தில் பரவியது. அங்கே தராசால் கறுப்புகள் வெளுக்கப்பட்டன. மக்களையும், அரசையும் முட்டாளாக நினைக்கும் கூட்டு கொள்ளைகள் இப்போது தான் வெளிச்சப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (83)
திராவிட மாடல் என்றால் சும்மாவா?
இவர் PTR அவர்களுக்கு எதிராக கலவரம் செய்ய தூண்டிய ஆடியோ வலைதளத்தில் வந்து கொண்டிருக்கு, அரசு தீர விசாரித்து விரைந்து நடவடிக்கையை துவக்க வேண்டும்.
கணக்கு இருக்கிறதா அண்ணாமலையாரே?
பழனி உண்டியலில் பக்தர்கள் ரூ 2.5 கோடி போட்டு விட்டார்களாம் என்று இவ்வ்ளவு பேர் உட்கார்ந்து காலை முதல் எண்ணுகின்றார்கள் எண்ணிக்கொண்டே இருக்கின்றார்கள். அப்போ இந்த ரூ 11 கோடியை என்ன எவ்வளவு பேர் வேண்டும் எவ்வளவு நாட்கள் ஆகும். கறுப்புப்பண முதலைகள் அனைவரும் அசோக் குமாருக்கு மனதார நன்றி சொல்கின்றார்கள் ஒரு கருப்பு வெள்ளை வழிகாட்டியதற்காக. இது எதன் காபி தெரியுமா??ரூபாய் மதிப்பிழப்பு ஞாபகம் இருக்கின்றதா???அதே வழி தான் இது???கருப்புப்பண முதலைகள் தங்கள் பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து இதை வங்கியில் செலுத்தி வெள்ளையாக்கி கொடுத்த்த்தால் இவ்வளவு உனக்கு கொடுக்கப்படும் என்று சொல்லி ஒருநாளில் ரூ 200 கூட சம்பாதிக்க வக்கில்லாதவன் வாங்கி கியூவில் கட்டு காட்டாக பணம் வைத்துக்கொண்டு இரவும் பகலும் நின்று அதை வெள்ளையாக்கி அதே பாணியில். தன்னிடம் இருந்த கணக்கில் வராத கருப்பு பணத்தை இவர்களிடம் கொடுத்து அதை வெள்ளையாக்கின அசோக் குமாரை கருப்பு பண முதலைகள் புகழ்ந்து தள்ளுகின்றார்கள் தங்களுக்கு நல்வழி காட்டியமைக்கு. இப்போ பார்க்கணுமே அங்கே அங்கே ஒவ்வொரு பார்ட்டியாக மொட்டை காதணி விழா பிறந்த நாள் கொண்டாட்டம் என்று அமர்களப்படப்போகுது இனி தமிழகமெங்கும்
இதெல்லாம் கிப்ட் வரியின் வராதா