சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் அப்பீல் வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
செயல்பட முடியாத நிலை
பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அப்பால் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோர எந்த புள்ளிவிவரங்களும் இல்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பு யூகத்தின் அடிப்படையிலானது. 2,539 உறுப்பினர்கள் பழனிசாமி இடைக்கால பொதுச்செயலராக ஆதரவளித்துளளனர். தனி நீதிபதி உத்தரவால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.,வால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும்.
தனி ஒரு நபர் பயனடையும் வகையில் தான் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது. ஜூன் 23 பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் பங்கேற்றதிலோ, அடுத்த பொதுக்குழு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதிலோ எந்த பிரச்னையும் இல்லை. பொதுக்குழு நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என எந்த பொதுக்குழு உறுப்பினரும் புகார் தெரிவிக்கவில்லை. ஓபிஎஸ் தரப்பினர் குறிப்பிட்டு எதையும் கோரிக்கை விடுக்கப்படாத நிலையில், கோரப்படாத நிவாரணம் வழங்கியது அசாதரணமானது. இவ்வாறு வாதிட்டார்.
பன்னீர்செல்வம் தரப்பு
இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 'கட்சி விதியின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். இதனால் இபிஎஸ் தரப்பு அளித்த ஜூலை 11 பொதுக்குழுக் கூட்ட நோட்டீஸ் செல்லாது. கட்சி நிர்வாகிகள் தேர்தலை பதிவு செய்யவே ஜூன் 23ல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் தேர்தல் விதிகள் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக எந்த தீர்மானமும் இல்லை.
மேலும், ஜூன் 23ல் தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை, நிராகரிக்கப்பட்டன. சஸ்பெண்ட் நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால் பதவிகள் காலியென கூறலாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்கிறார்கள். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவி காலியாகிவிடும் என விதி இல்லை' என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரு தரப்பினரின் வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக நாளை (ஆக.,26) மாலை 3 மணிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
வாசகர் கருத்து (6)
எடப்பாடி மாதிரி கட்சியை அபகரித்து விடுவாங்க என்பதற்காகவே தொண்டர்களின் வாக்கில தலைவராக வர வேண்டும் என்ற நல்ல விதியை கொண்டு வந்தார்.
என்ன தீர்ப்பு இருக்கும்? சிம்பிள். ரெண்டு ஜட்ஜ் பெஞ்ச், அதனால சொல்லி வெச்சி எதிரும் புதிருமா தீர்ப்பு எழுதியிருப்பாங்க. ஒர்த்தர் ஓப்பீஸ் ரைட்டுங்க, இன்னொர்த்தர் ஈ்ப்பீஸ் ரைட்டுன்னு சொல்லியிருப்பார். அப்புறம் என்ன? மறுபடியும் மொதல்லேருந்து தான். அதுக்குள்ளே அன்புசெழிநனை பொருளாளரா போட்டு ரஜினியை கட்சி ஆரம்பிக்க சொல்லி ஆடீம்காவை அதில மெர்ஜ் பண்ணி தமிழ்நாட்டில் 200 சீட்டு ஜெயிச்சு அண்ணாமல சைடுல நிக்க ரஜினி முதல்வர், அண்ணாமலே, ஓப்பீஸ் துணைமுதல்வர், நிதிமந்திரி, நம்ம அன்பு தான் 👍
என்னதான் உயர் நீதி மன்றம் , உச்ச நீதி மன்றம் வரை எடப்பாடி சென்றாலும் தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்க முடியும்
ஏற்கனவே இவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு 2026 வரை இருவருக்குமே பதவி காலம் உள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கட்சி சார்பாக உறுதி மொழி பத்திரம் வழங்கியுள்ளதால் சட்டப்படி பனீரை நீக்க முடியாது . என்னதான் எடப்பாடிக்கு செல்வாக்கு உள்ளதாக கூறினாலும் சட்டப்படி அவரை 2026வரை பதவி நீக்கம் செய்ய முடியாது . தேர்தல் ஆணையமே இறுதி முடிவெடுக்க முடியும் .
வாக்காள பொது மக்கள் கையூட்டுக்கு அஞ்சத்தபோது , பொதுக்குழு அங்கத்தினர், தொண்டர்கள் எம்மாத்திரம்? யதா ராஜா, ததா பிரஜா என்பது மாறி, மக்கள் எப்படியோ, மன்னன் அமைவது அப்படியே என்று இந்த கலியுகத்தில் குவாட்டருக்கும், பிரியாணிக்கும், கையூட்டுக்கும் மக்கள் அடிமை ஆகிவிட்டார்கள், எந்த அரசியல்வாதியும்(பன்னீர் உட்பட) உத்தமர் அல்ல என்பது நிதர்சனம்.