Load Image
dinamalar telegram
Advertisement

முதல் காலாண்டில் பணியமர்த்தல் 29 % அதிகரிப்பு : இண்டீட் சர்வேயில் தகவல்

Tamil News
ADVERTISEMENT


நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், நிறுவனங்களின் பணியமர்த்துதல் விகிதம், கடந்தாண்டு இதே காலத்தில் ஒப்பிடுகையில் 29 சதவீதம் அதிகரித்துள்ளது.



வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை பகிரும் இணையதளமான இன்டீட் (Indeed) நடத்திய சர்வேயில், முதல் காலாண்டில் வேலை தேடும் அல்லது வேலையை மாற்ற விரும்பும் ஊழியர்களின் எண்ணிக்கை 37 சதவீதமாக உள்ளது. இது முந்தைய காலாண்டில் 46 சதவீதமாக இருந்தது.

இன்டீட் விற்பனை பிரிவு தலைமை நிர்வாகி சசிகுமார் கூறுகையில்,

5 ஜி சேவை வரவுள்ள நிலையில், ஐ.டி.,ஹெல்த்கேர், இ-வணிகம் போன்ற துறைகளில் பணியமர்த்துதல் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. அடுத்த சில காலாண்டுகளில் டெலிகாம் சார்ந்த பணியமர்த்துதல் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும்.
Latest Tamil News
துறைகள் வாரியாக பார்க்கும்போது, ஐ.டி., ஐ.டி.,தொழில்நுட்பம் சார்ந்த சேவை துறைகளில் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதில், முதல் காலாண்டில் 91 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளது. இதுவே முந்தைய காலாண்டில் 83 சதவீதமாக இருந்தது. சமீபகாலமாக தன்னிச்சையாக தொழில்நுட்ப துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றம் இதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
Latest Tamil News
இந்த பட்டியலில் டிசைன் மற்றும் மேம்பாடு துறை (15 சதவீதத்தில் இருந்து 33 %) , உற்பத்தி மற்றும் மேலாண்மை ( 21 சதவீதத்தில் இருந்து 29 %), அக்கவுண்ட்ஸ், நிதி மேலாண்மை (21 சதவீதத்தில் இருந்து 26%) என அதிக விகிதத்தில் பணியமர்த்துதல் நடவடிக்கை பதிவாகி உள்ளது.

பணியமர்த்துதலில், மற்ற நகரங்களை விட மெட்ரோ நகரங்களின் ஆதிக்கம் தொடர்கிறது. பெங்களூர் (87 சதவீதத்தில் இருந்து 93 %), மும்பை (77 சதவீதத்தில் இருந்து 87 %), சென்னை ( 71 சதவீதத்தில் இருந்து 82 %) மற்ற நகரங்களை விட வலுவான வளர்ச்சி நிலையில் உள்ளது. சண்டிகர் (39 சதவீதத்தில் இருந்து 59 %) அதிகரிப்புடன், கடைசி இடத்தில் உள்ளது. வரும் காலாண்டுகளில் கணிசமாக பணியமர்த்துதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Latest Tamil News
வேலை தேடுவோரில் 10ல் 6 பேர், பணவீக்கத்தின் தாக்கத்தால் தங்களது வாழ்வாரத்தில் அதிகளவில் பாதிப்பில்லை எனவும், 89 சதவீதம் நிறுவனங்கள், பணவீக்கம், ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதிலோ, ஊதியம் வழங்குவதிலோ மாற்றத்தை ஏற்படுத்தாதென கூறியுள்ளனர்.

பணவீக்கத்தை சமாளிக்கும் வகையிலும், ஊழியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், பகுதி நேர, முழுநேர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் செலவுகளை சமாளிக்க, பல்வேறு வேலைவாய்ப்புகளை நிறுவனங்கள் அளித்துள்ளன. இதில் முழு நேர வேலைக்கு 63 சதவீதம் பேரும், பகுதி நேர வேலைக்கு 26 சதவீதம் பேரும், ஒப்பந்த அடிப்படையிலான வேலைக்கு 11 சதவீதம் பேரும் முன்னுரிமை அளித்துள்ளனர். நிறுவனங்கள் பார்வையில், 19 சதவீதம் ஒப்பந்த முறையில் வேலையை அளித்துள்ளது.

பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கான, மற்ற அனைத்து நடவடிக்கைகளை விட, ஊழியர்களின் சம்பள உயர்வு எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வது கடினமாக இருப்பதாக 27 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement