ADVERTISEMENT
சென்னை : தங்களை கண்டுகொள்ளாத தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்க, பரந்துார் விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் விவகாரத்தை கையிலெடுக்க, பா.ம.க., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், பரந்துாரில் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. புதிய விமான நிலையத்திற்காக 5,௦௦௦ ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்க, பரந்துார் விவகாரத்தை கையிலெடுக்க, பா.ம.க., திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
சென்னை -- சேலம் எட்டு வழிச்சாலை, நெய்வேலி என்.எல்.சி., நிறுவன விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பதை, பா.ம.க., கடுமையாக எதிர்த்து வருகிறது.தி.மு.க., அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான பரந்துார் விமான நிலையத்திற்கு, அப்பகுதி மக்களிடம் உள்ள எதிர்ப்பை பயன்படுத்தி போராட்டங்களை நடத்த, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன் முதல் கட்டமாக, பரந்துார் மக்களிடம், இன்று அன்புமணி கருத்து கேட்க இருக்கிறார். இதற்காக, காஞ்சிபுரத்தில் அரங்க கூட்டத்திற்கு பா.ம.க., ஏற்பாடு செய்துள்ளது.விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை சந்திப்பதால், தி.மு.க., அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு அன்புமணி தயாராகி விட்டதாக, பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து (20)
முகத்தோற்றமே "இவன் ஒரு திருட்டுப்பயல்" என்று காட்டிகொடும் அதிசயம் இவரிடம் மட்டுமே உள்ளது..
அவனுக்கு அவனுங்க தேவைக்கு ஏர்ப்ப போராட்டங்கள். அப்போ திமுக, விசிக, காங்கிரஸ், சர்ச்சுகள், கம்யூனிஸ்டுகள்கள், கலிங்கபட்டியார் ஏகப்பட்ட சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் , ஊடகங்கள் இப்படி ஏராளமானவர்கள். இப்போது மரம் வெட்டி குழுவினர். விளங்கிடும்.
மும்முனை தாக்குதல் ஒன்று பிஜேபி , நாம் தமிழர் கட்சி தற்போது பாட்டாளி மக்கள் கட்சி. கூடிய விரைவில் அதிமுக இடம்பெறும். பாவம் விடியல் அரசு முழி பிதுங்க போகிறது .
பதவியில் இல்லாமலே பல கோடிகள் எப்படி சம்பாதிப்பது என்பதை இவரிடம்தான் கற்கவேண்டும்.. திருமாவைப்போல , சீமானை போல .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எட்டு வழிச்சாலை வந்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்ற தில்லுமுல்லு மாடல் விமான நிலையத்துக்கு விவசாய நிலத்தை எடுக்கலாமா? வெட்கங்கெட்ட திருட்டு மாடல்