ADVERTISEMENT
கோவை: அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை கொடுக்குமாறு முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதாக குற்றம்சாட்டும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, திமுக.,வின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை பணியா எனவும் கேள்வி எழுப்பினார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு (ஆக.,23) விமானம் மூலம் கோவை வந்தார். கோவை மாவட்டம் ஈச்சனாரியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டப்பணிகள் துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவிற்கு மக்களை அழைத்து வர பள்ளி வாகனங்களை கொடுக்க முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: இன்று கோவையிலும், ஆகஸ்ட் 26ம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன். திமுக.,வின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாசகர் கருத்து (53)
களவுத்துறை / கலவித்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கல்வித்துறை
உங்கள் பாஜக கட்சி மீட்டிங்கிக்கு வரவழைக்கப் படும் கூட்டத்தை விட அதிகமாக திமுக தலைவர் மீட்டிங்கிக்கு மக்கள் கூட்டம் தானாகவே வருவது கண்டு ஏன் இத்தனை பொறாமை, எரிச்சல்,
குறைக்கிறது வேட்டைக்கு ஆகாது என்பதை பழமொழியாக கேட்டுள்ளோம். அனால் அதை இப்போதுதான் நேரில் காண்கிறோம்.
அண்ணாமலை சார் எல்லாரையும் ரௌண்டு கட்டி அடிக்கிறீங்க. நீங்க கேட்கிற ஒவ்வொரு கேள்வியும் திமுகவினரின் தூக்கத்தை விரட்டிவிடுகிறது. எது எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி. வாழ்க திரு அண்ணாமலை. வளர்க திரு அண்ணாமலை அவர்களின் மக்கள் பணி.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
அகில உலக துணை நடிகர் சூப்பர்ஸ்டார் உதைணாவின் அகில உலக ரசிகர் மன்ற தலைவர் பொய் மொழி ஆள் பிடிக்கும் வேலை செய்யாமல் அவியலா செய்வார்? ஹி...ஹி...ஹி...