Load Image
Advertisement

மருத்துவ பரிசோதனைக்கு வெளிநாடு செல்கிறார் சோனியா

 மருத்துவ பரிசோதனைக்கு வெளிநாடு செல்கிறார் சோனியா
ADVERTISEMENT
புதுடில்லி: மருத்துவ பரிசோதனைக்காக காங்., தலைவர் சோனியா வெளிநாடு செல்கிறார். அவருடன், ராகுல், பிரியங்காவும் உடன் செல்கின்றனர். அவர் எப்போது செல்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.


ஜனாதிபதி திரவுபதி முர்முவை காங்., தலைவர் சோனியா நேற்று(ஆக.,23) சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சியில், உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் கட்சி வழங்கிய பொறுப்புகளில்இருந்து ராஜினாமா செய்துவிட்டனர். இச்சூழ்நிலையில், நேற்று ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை, காங்., தலைவர் சோனியா சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

Latest Tamil News
இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக சோனியா வெளிநாடு செல்ல உள்ளனர். அவருடன், ராகுல் மற்றும் பிரியங்காவும் உடன் செல்கின்றனர். இதனை அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மேலும் அவர் வரும் 4 ம் தேதி டில்லியில் நடக்கும் கூட்டம் ஒன்றில் ராகுல் பேச உள்ளதாகவும், சோனியா நாடு திரும்பும் வழியில் அவரது தாயாரை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.


வாசகர் கருத்து (37)

  • பேசும் தமிழன் -

    கொள்ளை அடித்து பதுக்கி வைத்துள்ள முதலீடுகள் எல்லாம் சரியாக உள்ளதா என்று சரி பார்க்க போகிறார் என்று மக்கள் பேசி கொள்கிறார்கள் .

  • madhavan rajan - trichy,இந்தியா

    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நேரு,இந்திரா, ராஜீவ், சஞ்சய் போன்ற பலர் பெயர்களில் நூற்றுக்கணக்கான மருத்துவ பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் துவங்கப்பட்டனவே. அதில் எதிலும் இவருடைய நோய் தீர்க்கும் வசதிகள் இல்லையா அல்லது அவர்கள் மீதி நம்பிக்கையில்லையா? இல்லையென்றால் வேறு ஏதாவது முதலீடு விஷயமாக கூட இருக்கலாம்.

  • Sadiq Batcha - Tiruchi,இந்தியா

    அம்மையார் நூறாண்டு வாழ்ந்து மோடி அவர்கள் அப்போதும் நாட்டின் பிரதமராக இருப்பதை பார்த்து ரசிக்க வேண்டும்

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    மருத்துவ பரிசோதனைக்காக சோனியா வெளிநாடு செல்ல உள்ளனர். அவருடன், ராகுல் மற்றும் பிரியங்காவும் உடன் செல்கின்றனர். குடும்பத்துடம் பெட்டி படுக்கைகளுடனும் சேமித்து பணத்துடனும் சொந்த பரிவாரங்களுடனும் இவர் வெளிநாடு செய்வதைப்பார்த்தால், இந்தியா சுதந்திரம் அடைந்த தினம்தான் நினைவிற்கு வருகிறது. பெட்டி படுக்கைகளுடன் மவுண்டுபாட்டன் பிரபு இங்கிருந்து கிளம்பியது. அவ்வளவேதான்.

  • Soumya - Trichy,இந்தியா

    நேஷனல் ஹெரால்ட் ஊழலில் மாட்டிக்கொண்டதால் நெஞ்சி வலி வந்திருக்கும் திரும்பி வராதே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்