Load Image
Advertisement

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த திமுக எம்.பி.,: தொடரும் சர்ச்சை

 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்த திமுக எம்.பி.,: தொடரும் சர்ச்சை
ADVERTISEMENT

சென்னை: அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, திமுக குறித்து காட்டமான கருத்தை முன்வைத்தார். தலைமை நீதிபதியின் கருத்தை திமுக எம்.பி., செந்தில்குமார் விமர்சித்துள்ளார். இது சர்ச்சையாகியுள்ளது.


தேர்தலின்போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வழக்கின் இன்றைய (ஆக.,23) விசாரணையின்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‛திமுக மட்டும்தான் சாதுரியமான, புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம். பல விவகாரங்கள் குறித்து பேசாமல் இருப்பதால் அதை அறியாமல் இல்லை என நினைக்க வேண்டாம்' என திமுக வழக்கறிஞரிடம் காட்டமாக தெரிவித்தார்.

Latest Tamil News
தலைமை நீதிபதியின் இந்த கருத்தை தர்மபுரி லோக்சபா தொகுதி திமுக எம்.பி., செந்தில்குமார் விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், ‛ஆம். சமூகநீதி ஆட்சி மூலம் இதை சாதித்து, தரவுகள் மூலம் நிரூபித்து காட்டிய கட்சி திமுக மட்டுமே. இதில் என்ன சந்தேகம், My UnLords' என விமர்சித்துள்ளார். நீதிபதியை ‛லார்ட்' என்று குறிப்பிடாமல் அதற்கு எதிர் பதத்தில் ‛அன் லார்ட்ஸ்' என்று குறிப்பிட்டு திமுக எம்.பி., குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Latest Tamil News
மேலும் அவர், ‛உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படாத வரை, அவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் முற்பட்ட சாதியினராக இருந்தனர். சமூகநீதி மற்றும் மக்கள் நலன் நடவடிக்கைகளுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்போம். கருணாநிதியின் முயற்சியால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நீதிபதிகளாகினர்' எனவும் விமர்சித்திருந்தார்.


சாதி அடிப்படையிலான இவரின் விமர்சனத்திற்கு பா.ஜ.,வின் நாராயணன் திருப்பதி பதிலளிக்கையில், ‛நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவிப்பது குற்றமாகும். சாதியின் பெயரால் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இந்த பார்லி., உறுப்பினர் தண்டிக்கப்பட வேண்டும்' என்றார். இதனையும் விமர்சித்த திமுக எம்.பி., செந்தில்குமார், ‛செய்யுங்கள்.. முடிந்தால் தொட்டு பாருங்கள்' என தெரிவித்துள்ளார். செந்தில்குமாரின் இந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பூமி பூஜைக்கு எதிராக பேசியவர்



ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக, அரசு திட்டத்திற்கான பூமி பூஜையில் ஹிந்து சமுதாயத்தை மட்டுமின்றி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ பாதிரியார்களை மற்றும் கடவுள் மறுப்பு இயக்கத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து இது போன்ற பணியை துவங்க வேண்டும் எனக்கூறி பூமி பூஜைக்கு எதிராக பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



வாசகர் கருத்து (69)

  • Raa - Chennai,இந்தியா

    தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஒட்டு போட்ட தருமபுரியில் உள்ளனர்

  • Raa - Chennai,இந்தியா

    t ......

  • Hosurian -

    நீதிமன்றத்தை இவ்வாறு விமர்சிப்பது தவறான முன்னுதா ரனமாகிவிடும். அவர் சரி என்று நினைத்தால் சட்ட மன்றத்திலோ / மக்களவையிலோ தீர்மானம் நிறைவேற்றட்டும். இவ்வாறு பேசுவதை திமுகவினர் தவிர்ப்பது அவர்களுக்கு நல்லது.

  • rameshkumar natarajan - kochi,இந்தியா

    In this issue, what PTR says is correct only. In democracy , people are supreme. When someone has people's mandate who else can question? If they don't perform up to the expectations, people will punish them through votes.

  • ThiaguK - Madurai,இந்தியா

    இவரை சொல்ல தூண்டுவதே மேலிடம்தான் இது போல் பழைய தலைவரும் ஒரு பக்கம் சிக்கலிகள் செய்ய விட்டு எதுவும் தெரியாதது போல் இருப்பார் ..சுளுக்கு எடுப்பது ஒன்றே தீர்வு ..வெங்காயங்களை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement