காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம்; தமிழகம் முழுதும் அமல்படுத்த முடியுமா?
சென்னை-மது கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, தமிழகம் முழுதும் செயல்படுத்துவதில் சிரமம் இருப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலைப் பிரதேசங்களில் உள்ள மதுக் கடைகளில், பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று, காலி பாட்டில்களை ஒப்படைக்கும் பட்சத்தில், அந்த 10 ரூபாயை திரும்ப வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.இந்த திட்டம் மலைப்பகுதிகளில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும்படி, 'டாஸ்மாக்' நிர்வாகத்துக்கு, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இவ்வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'மலைப்பகுதிகளில் விற்கப்பட்ட 88 லட்சம் பாட்டில்களில், 52 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளன' என கூறப்பட்டுள்ளது.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''மலைப் பகுதிகளில் குறைவான எண்ணிக்கையிலே கடைகள் இருக்கும். அங்கு, இத்திட்டத்தை அமல்படுத்துவது எளிது. ''தமிழகம் முழுதும் அமல்படுத்துவதில் சிரமம் உள்ளது.

கடைகளுடன் இணைந்த 'பார்'களில் பாட்டில்களை திரும்ப பெறலாம். கடையில் வாங்கி சென்று, வேறு இடங்களில் குடிப்பவர்களிடம், பாட்டில்களை திரும்ப பெறுவது சிரமம்,'' என்றார்.இதையடுத்து, 'தினசரிஎத்தனை பாட்டில்கள் விற்கப்படுகின்றன?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல், மாதம் 51 கோடி பாட்டில்கள் விற்கப்படுவதாக தெரிவித்தார்.
பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுதும் அமல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்த அரசின் அறிக்கையை ஆய்வு செய்யும்படி, நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, செப்டம்பர் 16க்கு தள்ளி வைத்தனர்.
வாசகர் கருத்து (7)
புறங்கை நக்க சான்சு இருந்தா கோமாளி துக்ளக் விடியல் உடனே அமல் படுத்துவான்
தீபாவளி பண்டிகைக்கு முன்னது விற்பனையில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் இது இப்போதைக்கு சாத்தியமில்லை யுவர் ஆனர். நிர்வாகம் மது ஊட்டிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வாயில் ஊற்றி விட்டு குப்பியை திரும்ப எடுத்துக்கொள்ளும் திட்டம் இருக்கிறது. அதை செயல்படுத்த கால அவகாசம் தேவை.
எதுக்கு இந்த பாட்டில் விற்பது திரும்ப வாங்குவது எல்லாம் மக்களுக்கு பயன்பெறும் வகையில் பாக்கெட் சாராயம் காய்ச்சி விக்கலாமே
பாத்திரம் கொண்டுவந்து நூறு இருநூறு மில்லி என்று விற்பனை செய்யலாம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
உத்தரப்பிரதேசம், கர்நாடகா, பாண்டிச்சேரி, இமாச்சல் பிரதேஷ், மத்தியப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற கேள்விகள் எழுவதில்லை ஏன்?