இந்திய நிறுவனங்களில் பணியாற்றும் 10 பேரில் 4 பேர், பணியிட சூழல் காரணமாக அதிகளவில் சோர்வு, கவலை, மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை உணர்வதாக மெக்கின்சி நடத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
'பணியாளர் மனநலம் மற்றும் சோர்வு - செயல்பட வேண்டிய நேரம்' என்ற தலைப்பில் பணியாளர்கள் மத்தியில் சர்வதேச கன்சல்டிங் நிறுவனமான மெக்கின்சி ஹெல்த் இன்ஸ்டியூட் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த, 15,000 பணியாளர்கள், 1,000 மனித வள மேம்பாட்டு அலுவலர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில், பல பணியாளர்கள், எரிச்சல், துன்பம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவை அதிகளவில் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். பதிலளித்த 10 பேரில், 4 பேர் இதன் அறிகுறிகளுடன் காணப்பட்டனர் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கு நச்சுத்தன்மை வாய்ந்த பணியிடமே முக்கிய காரணம் 90 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

மேலும், பணியிட சூழலில் காணப்படும் நடத்தை தான் பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு எடுப்பதற்கு 90 சதவீதம் காரணமாக அமைகிறது. இந்தியாவில் பணியாளர்கள், தங்கள் வேலையை விட்டு வெளியேறுவதற்கான விருப்பத்தை, உலகளாவிய சராசரியோடு ஒப்பிடுகையில், சுமார் 60 சதவீதம் அதிகமாக உள்ளது.
வாசகர் கருத்து (7)
அமெரிக்கா, ஐரோப்பாக்காரனெல்லாம் சும்மா ஆர்டர் குடுத்துருவானாக்கும்? இல்லெந் இந்திய ஐ.டி கார்ப்பரேட்கள் இவிங்களை சும்மா உக்கார வெச்சு சம்பளம் குடுத்துருவாங்களா? ஜாவா தெரியும், ஆரேக்கிள் தெரியும், கோபால் தெரியும்னு வேலையில் சேந்தா, ஜாவா ல வேலை இல்லாத போது கோபாலில் வேலை வாங்குவாங்க. அது இல்லேன்னா ஆரேக்கிளில் வேலை செய்தச் சொல்லுவாங்க. அதுவும்.இல்லேன்னா, அலுவலகத்தை சுத்தம் செய்யச் சொல்லுவாங்க. மன அழுத்தம் வராம என்ன செய்யும்?
IT யில் மேலதிகாரி தான் புருஷன்,பிள்ளை எல்லாம் . உன்னுயிர் என் கையில் தான் என்பது போல எப்பவும் ஒரு சொல்லப்படாத மிரட்டல் இருக்கும். எத்தனையோ லட்ஷம் பேர் இப்படிப் பயந்து பயந்து தான் வாழ்கிறார்கள்.
உண்மைதான் நானும் கணவரும் 2012 இல் வேலையை விட்டு விவசாயம் என்று முடிவெடுத்தது இதும் ஒரு காரணமாக இருந்தது
Did they survey government staff???
மருத்துவப் பரிசோதனையில் மனஅழுத்தம் இல்லை என்பது பாஸ் 🙃க்கு தெரிய வந்தால் அன்றே வேலை காலி. முழுமையான அர்ப்பணிப்புடன் வேலை செய்யவில்லை எனும் முடிவுக்கு வந்துவிடுவார்கள்.