குற்ற தடுப்பு நடவடிக்கை: 417 ரவுடிகளிடம் விசாரணை
சென்னை:சென்னையில், குற்றத் தடுப்பு நடவடிக்கையாக, ரவுடிகள் 417 பேரின் வீடுகள் மற்றும் பதுங்கி இருந்த இடங்களில் விசாரணை நடத்தி, 11 பேரை கைது செய்தனர்.
குற்றத் தடுப்பு நடவடிக்கையாக கொலை, கூட்டுக் கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியோரின் வீடு மற்றும் இவர்கள் பதுங்கி இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று விசாரிக்க வேண்டும்.இவர்கள், தற்போது ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால், உடனடியாக கைது செய்ய வேண்டும். தவறினால், போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.
'இனி எவ்வித குற்றங்களிலும் ஈடுபட மாட்டோம்' என, 33 பேரிடம் துணை கமிஷனர்கள் உறுதிமொழி பத்திரம் பெற்றுள்ளனர்.இதுகுறித்து, கமிஷனர் சங்கர் ஜிவால் கூறுகையில், ''குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் கைது செய்யப்படுவர் என, கடும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

இதையைடுத்து, தனிப்படை போலீசார் ரவுடிகள் குறித்த பட்டியல் தயாரித்து, அவர்களின் தற்போதைய செயல்பாடுகள் பற்றி ரகசியமாக கண்காணித்து வந்தனர்.அதன் அடிப்படையில், சென்னை முழுதும் நேற்று, ரவுடிகள் 417 பேரின் வீடு மற்றும் பதுங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த, 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
'இனி எவ்வித குற்றங்களிலும் ஈடுபட மாட்டோம்' என, 33 பேரிடம் துணை கமிஷனர்கள் உறுதிமொழி பத்திரம் பெற்றுள்ளனர்.இதுகுறித்து, கமிஷனர் சங்கர் ஜிவால் கூறுகையில், ''குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர். குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் கைது செய்யப்படுவர் என, கடும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!