மதுரையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம்?
மதுரை: கடந்த முறை ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் சண்டிகரில் நடந்தது. அடுத்த கூட்டம் செப்டம்பரில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும் என, தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்திருந்தார்.

சமீபத்தில் அவர், ஜி.எஸ்.டி., கவுன்சில் தலைவராக இருக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் மூன்று பக்க கடிதம் எழுதியுள்ளார்.இதில், 'அடுத்த ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும். மதுரை என் தொகுதி மட்டுமல்ல, தமிழக கலாசாரத்தை பறைசாற்றும் நகரம்.
கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து மாநில அமைச்சர்களையும், மதுரையில் உள்ள மீனாட்சி கோவில், சரித்திரப்புகழ் வாய்ந்த இடங்கள் மற்றும் அருகில் உள்ள அனைத்து இடங்களுக்கும் நானே அழைத்து செல்கிறேன். கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து அமைச்சர்களுக்கும் தமிழக முதல்வர் விருந்து அளிப்பார்' என எழுதியுள்ளாராம் தியாகராஜன்.

இதையடுத்து, தமிழக நிதி அமைச்சர், மத்திய நிதி அமைச்சருக்கு அடிக்கடி போன் செய்து 'ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு தேதி குறித்துவிட்டீர்களா' என கேட்டுக் கொண்டேயிருக்கிறாராம். 'இந்தக் கூட்டத்தை வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்' எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.
வாசகர் கருத்து (36)
இது ஒரு நல்ல முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது (எல்லோரும் திட்டினாலும் சரி)... வட மாநில அமைச்சர்களுக்கு தமிழகத்தை பற்றி அதிகம் தெரியாது... அவர்கள் காண்பதெல்லாம், உதவாக்கரை ஆ ராசா போன்றவர்களின் பேச்சுதான், அந்த களங்கத்தை நீக்க இப்படி ஒரு முயற்சி தேவை.. ஆனால் ஒன்று, செஸ் ஒலிம்பியாட் சமயத்தில் செய்ததுபோல, AR ரஹ்மான் இசையில் டாலினை முழுவதும் வெள்ளை உடை அணிந்து லெஜெண்ட் அருள் சரவணன் போல நடந்து வராமல் இருக்க செய்யவேண்டும் ....
சும்மா கெத்து வறட்டு ஜம்பம் காட்டி, எதிர்கட்சி ஆளும் முதலமைச்சர்களை வைத்து விளம்பரம் தேடும் முயற்சி ...
அரசியல் செய்திகள் உண்மைக்கு ஏற்றவாறு காட்டப்படவில்லை.
திங்கட்கிழமை அமைச்சருக்கு ஒரு சீமந்தம் பங்சன் இருக்கிறது. மறக்காமல் 30 பைசா சிலரையா எடுத்துகிட்டு வாங்க.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நீங்கள் தான் ரொம்ப தைரியசாலி ஆச்சே! மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கூட்டத்தைக் கூட்ட வேண்டியது தானே!