ADVERTISEMENT
சென்னை : தமிழகத்தில் போதை பொருள் வழக்கில் சிக்குபவரின், உறவினர்களின் சொத்துக்களையும் முடக்க, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை, தமிழக காவல் துறை தலைமை அலுவலகத்தில், டி.ஜி.பி., சைலேந்திரபாபு தலைமையில், 'ஆன்லைன்' வாயிலாக அனைத்து மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்தில், கஞ்சா, ஹெராயின், கொகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கும் சில்லரை வியாபாரிகள் முதல் தொடர்புடைய 'மாபியா'க்கள் வரை, அனைவர் குறித்த விபரங்களையும் சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது.

உளவுத்துறை போலீசார் உதவியுடன், விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்யுமாறும், அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், உறவினர்களின் சொத்துக்களையும் முடக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க, எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், கப்பல்களில் போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க, ரோந்து படகுகள் வாயிலாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது.
பள்ளி, கல்லுாரிகளில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்கும்படியும், போதை பொருள் விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டது.
வாசகர் கருத்து (15)
இது என்ன கஞ்சா 101.0 நடவடிக்கையில் வருமா ?
Spineless police officer.
டிஜிபிக்கு பயந்து மாமல்லபுரமே மாறிடுச்சாம்.
உபி அரசு செய்தது போல வீடுகளை இடித்து தள்ளுங்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
யூஸ் லெஸ் பெல்லோ.😆