மும்பை:மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, மும்பை முழுதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்; பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
போலீசார் உஷார்
இந்நிலையில், மும்பை போக்குவரத்து போலீசாரின், 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு நேற்று முன்தினம் தொடர்ச்சியாக மிரட்டல் செய்திகள் வந்தன. அவற்றில், 2008ல் நடந்த தாக்குதல் போல் மீண்டும் தாக்குதல் நடத்தப் போவதாகவும், மும்பை நகரை தகர்க்கப் போவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் கூறியதாவது:மும்பையை தகர்க்க ஆறு பயங்கரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக தகவல்கள் வந்தன.மிரட்டல் விடுத்து தகவல் அனுப்பிய போன் எண், பாகிஸ்தானைச் சேர்ந்தது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள
மிரட்டல் தொடர்பான செய்தியில், மும்பை தாக்குதல் வழக்கில் துாக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப், அல் - குவைதா தலைவர் அய்மான் அல் ஜவாகிரி ஆகியோரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துள்ளோம். மும்பை முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். கடலோர பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் தொடர்பாக வொர்லி போலீஸ் ஸ்டேஷனில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிதி திரட்டியவர் கைது
டில்லியில் வசித்தபடி லஷ்கர் - இ - தொய்பா, அல் பதார் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்ட முகமது யாசின் என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். இவர், டில்லியில் ஜவுளித் தொழில் செய்வதாக கூறி, ஹவாலா வாயிலாக பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இவரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் பெற்ற அப்துல் ஹமீது மிர் என்பவர் சமீபத்தில் காஷ்மீரில் கைது செய்யப்பட்டார். இவர் அளித்த தகவல் அடிப்படையில் தற்போது முகமது யாசின் கைது செய்யப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்கா நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட நிதியை, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு இவர் அனுப்பி வைத்தது, விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த இரண்டு மாநிலங்களிலும் விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (5)
நிதி கொடுப்போரை தொடர்பு கொண்டு விசாரிக்கலாம். முளையிலேயே கிள்ளி வீச வேண்டிய விசயத்தை விட்டு வைப்பது ஆபத்து.
,,,,