Load Image
Advertisement

டெக் நிறுவனங்களில் பணிநீக்கம் அதிகரிப்பு: உஷார் ஊழியர்களே

 டெக் நிறுவனங்களில் பணிநீக்கம் அதிகரிப்பு: உஷார் ஊழியர்களே
ADVERTISEMENT
பொருளாதார மந்தநிலை அச்சம் குறித்த பேச்சு தற்போது தினமும் செய்திகளில் அடிபடுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக எம்.என்.சி., டெக் கம்பெனிகள் பல ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு தூக்கி வருகிறது. கடுமையாக உழையுங்கள் இல்லையெனில் உங்கள் வேலையும் பறிக்கப்படும் என பயமுறுத்தியும் வருகின்றனர்.


கோவிட் தொற்றினால் உலகளவில் போடப்பட்ட ஊரங்கு பல்வேறு தொழில்களை முடக்கியது. கடந்த 2021 இறுதியிலிருந்து மெல்ல பொருளாதாரம் மீண்டு வந்தது. அந்த சமயத்தில் அமெரிக்காவில் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்திருந்தது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்டதால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் உயர்ந்தது. இது ஏற்கனவே எகிறிக்கிடந்த விலைவாசியை இன்னும் உயர்த்தியது. இதனால் அனைத்து நாடுகளின் மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. தொழில்நுட்பங்களுக்கு செலவிடுவதை குறைக்கின்றன. இது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Tamil News

2022ல் பணியாளர்களை அனுப்பிய பெரு நிறுவனங்கள்!



இந்தாண்டில் மட்டும் உலகளவில் பல பெருநிறுவனங்கள் தங்களின் செலவை குறைக்கும் நோக்கில் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான மைக்ரோசாப்ட் ஜூலையில் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கள் நிறுவனங்களில் இருந்து 1,800 ஊழியர்களின் சீட்டை கிழித்துள்ளது.

Latest Tamil News

ஆப்பிள் நிறுவனம் ஒப்பந்த பணியில் இருந்த வேலைக்கு ஆள் தேர்வு செய்யும் 100 நபர்களையே வீட்டு அனுப்பியுள்ளது. புதிய நபர்கள் எடுப்பதை கட்டுப்படுத்த மற்றும் செலவை குறைக்க இந்நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

Latest Tamil News

சீன டெக் நிறுவனமான டென்சென்ட்டின் காலாண்டு வருவாய் முடிவுகள் திட்டமிட்டப்படி இல்லாததால் வேலை நீக்கத்தை அறிவித்தது. கடந்த காலாண்டில் மட்டும் 5,500 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளது. Latest Tamil News
பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் ஜூன் மாதம் 3,00 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மே மாதமும் இந்நிறுவனம் 150 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது. இதன் வரவு - செலவு பாதிக்கப்பட்டதால் இந்நடவடிக்கையில் இறங்கியது.



டுவிட்டர் நிறுவனம் ஜூலையில் வேலைக்கு ஆள் எடுக்கும் குழுவிலிருந்து 30 சதவீதம் பேரை பணி நீக்கியது. மேலும் 100 பணியாளர்களை நீக்கியுள்ளது.

Latest Tamil News

மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஜூலையில் அமெரிக்க அலுவலகங்களிலிருந்து 229 பேரை தூக்கியது.

Latest Tamil News

டெக் அசுரன் கூகுள், கடுமையாக உழைக்க வேண்டிய காலக்கட்டம், இல்லையேல் வீட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும் என தங்கள் ஊழியர்களை எச்சரித்துள்ளது.



வாசகர் கருத்து (10)

  • Sivagiri - chennai,இந்தியா

    பல ஆயிரக்கணக்கான பணியாளர்களில் சில நூறு பேர் போவதும் வருவதுமாகத்தான் இருப்பார்கள் . , இங்கிருந்து அங்கே - அங்கிருந்து இங்கே என்று . .

  • K.P SARATHI - chennai,இந்தியா

    சிறுவயதிலேயே அதிக சம்பளம் வாங்குவது முறையற்ற பொருளாதாரமாக மாறிவிடும்

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ஃபாரின் பயபுள்ளீங்கோ கியூலே நின்னு வேல வாங்கிட்டு போவாங்க.

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    விஞ்ஞான நிறுவனத்தில் படித்து நல்ல வேலையில் உள்ளவன் எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்கிறான். ஆனால் டுமிழ்நாட்டில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்து தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் திருட்டு திமுகவினர் எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக இருக்கிறான். என்ன கொடுமை சரவணன் இது?

  • அப்புசாமி -

    டெக் வேலை போனா என்ன? பக்கோடா, பானிபூரி ஸ்டார்ட் அப் ஆரம்பியுங்க. லோன் குடுப்பாங்க. கட்ட முடியலைன்னா வாராக்கடன் வங்கில சேத்துருவாங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement