ஆம்ஆத்மிக்கு எதிராக காங்., போராட்டம்; சிறை செல்ல தயார் என்கிறார் சிசோடியா

மதுபான கடை , விற்பனை உரிமம் உள்ளிட்ட மது பார் நடத்தும் லைசென்ஸ் புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ., துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு மற்றும் பல்வேறு அலுவலகங்களில் ரெய்டு நடத்தினர்.
இந்நிலையில் சிசோடியா பதவி விலக கோரி டில்லியில் அவரது வீட்டின் முன்பு காங்., தொண்டர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
மணீஷ் சிசோடியா பேட்டி
நேற்று ரெய்டு நடந்த நிலையில் இன்று சிசோடியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . நாங்கள் உருவாக்கிய சட்ட திருத்தம் நல்ல விஷயம். இந்தியாவிலலேய சிறந்த முயற்சியாகும். ஆனால் தவறாக சித்தரிக்கப்படுகிறது. இந்தியாவுக்காக சிறை செல்ல தயார். இன்னும் சில நாட்களில் என்னை கைது செய்ய முயற்சி நடக்கிறது. சிபிஐக்கு தலைவணங்க மாட்டோம்.
குஜராத்தில் நடந்த மது பான விற்பனை தொடர்பாக ஏன் விசாரணை நடத்தவில்லை ? முதல்வர் கெஜ்ரிவால் வளர்ச்சி சிலருக்கு பொறுக்க முடியவில்லை வரும் 2024 தேர்தல் மோடியா, கெஜ்ரிவாலா என்று தான் இருக்கும். இதற்கென பா.ஜ., அஞ்சுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் சிபிஐயிடம் பலமான ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. துணை முதல்வர் உதவியாளர் அரோரோ என்பவரது வங்கி கணக்கில் வரவாகியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
வாசகர் கருத்து (15)
ஐயா என்ன இந்தியாவுக்காகவா சிறை செல்கிரிர்கள், நீங்கள் கொள்ளை அடித்தது உங்கள் குடும்பத்துக்கு, இதில் எங்கு நாடு வந்தது..
என்னாது..... மோடியா..... கெஜ்ரிவாலான்னு போட்டியா...... நல்ல காமெடி
இது என்னடா புது கூத்து. அப்போ மோடியா ஸ்டாலினா, மோடியா சந்திரசேகர ராவா, மோடியா மம்தாவா, மோடியா நிதீஷ்ஷா, மோடியா பவாரா, மோடியா ராகுலா, மோடியா கேஜ்ரிவால்லா, . இப்படியே போய்கிட்டு இருந்தா இதுக்கு என்னதான் முடிவு. சட்டு புட்டுணு ஒரு முடிவுக்கு வாங்க.
நம்ம தமிழ் நாட்டில மாஜி மணிகள் மற்றும் ஃப்ராடு பேர்வழிகள் ஜாலியா சுத்தறாங்களே.
மது விற்பனை செய்வதில் எல்லா அரசாங்கங்களும் குறியாக இருப்பது எதனால்? மால்களிலும் ஆன்லயன் மூலமும் அந்தந்த தயாரிப்பாளர்களின் ஷோ ரூம் மூலமாகவோ விற்பனை செய்யலாமே ..