ADVERTISEMENT
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே அரக்காடு பகுதியில் நான்கு வயது குழந்தை சரிதா கடந்த ஆக.,10ம் தேதி சிறுத்தை தாக்கி பலியானார். இதை தொடர்ந்து, வனத்துறையினர் அப்பகுதியில், 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வந்தனர். கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. தொடர்ந்து, நேற்று(ஆக.,19) அங்கு கூண்டு வைத்து கண்காணித்தனர். இன்று(ஆக.,20) அதிகாலையில் அங்கு வந்த சிறுத்தை வனத்துறை கூண்டில் சிக்கியது. பின், வாகனத்தில் சிறுத்தை கொண்டு செல்லப்பட்டு முதுமலை வனத்தில் விடுவித்தனர்.
வாசகர் கருத்து (2)
அதனை கொல்ல வேண்டியது தானே? அதற்கு என்ன இரக்கம்? காட்டில் விடுவீர்கள்? மனித ருசி அறிந்த அது திரும்ப வரும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஒரு சிறுமியை கொன்ற நாலு கால் சிறுத்தையை புடிச்சாச்சு என்பது மற்ற ஊர்களில் சிறுத்தைகளால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி....