முன்னும் பின்னும் மட்டும் பிங்க் ஏன்: அமைச்சர் விளக்கம்
பெரம்பலுார்: ''டவுன் பஸ்களின் பக்கவாட்டில் விளம்பரம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளதால், பிங்க் நிற பெயின்ட் அடிக்கவில்லை,'' என, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். பெரம்பலுாரில் அவர் அளித்த பேட்டி: மகளிர் இலவசமாக பயணம் செய்யும் பஸ்களை அடையாளம் காண, முன்னும் பின்னும் இளஞ்சிவப்பு நிற 'பெயின்ட்' அடிக்கப்பட்டது. பஸ்சின் பக்கவாட்டில் பெயின்ட் அடிக்காததால், சிலர் கிண்டல் செய்தனர். போக்குவரத்துத் துறை, மிகுந்த கடனில் உள்ளது. வருவாயை பெருக்க, பக்கவாட்டிலும் விளம்பரம் செய்யும் திட்டம் உள்ளது. அதனால் பெயின்ட் அடிக்கவில்லை, என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நல்ல யோசனை தான்.