மக்களை தேடி மருத்துவ திட்டம்: மருந்து தேடி அலையும் மக்கள்
சென்னை-மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பயன் பெறும் நோயாளிகள், உரிய நேரத்தில் மருந்து கிடைக்காமல் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.தமிழகத்தில் 2021 ஆக., 5ல், 'மக்களை தேடி மருத்துவ திட்டம்' துவக்கப்பட்டது.

இத்திட்டத்தில், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டோர் வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.அந்த வகையில் உயர் ரத்த அழுத்தம் 33.12 லட்சம்; நீரிழிவு நோயாளிகள் 23.07 லட்சம்; ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள் 16.86 லட்சம் என, பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட 84 லட்சம் பேர், இதுவரை பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், உரிய நேரத்தில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இது குறித்து, நோயாளிகள் கூறியதாவது:இந்த திட்டத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஆரம்பத்தில் மருந்து, மாத்திரைகள் காலியாகும் தேதிக்கு முன்னதாக தெரிவித்தால், வீடுகளுக்கு வந்து வழங்கி விடுவர்.தற்போது, காலம் கடத்துகின்றனர். மாத்திரைகள் காலியாகி விட்டதாக சொன்னாலும், வந்து தருவதில்லை.

அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போய் கேட்டால், மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு, இங்கே மருந்துகள் வழங்க முடியாது என்கின்றனர்.எனவே, உரிய நேரத்தில் மருந்து, மாத்திரைகள் கிடைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (11)
போன் ஒயர் பிஞ்சு ஒரு மாசமாச்சு. அரசியலிலே இதெல்லாம் சகஜமப்பா. ஒழுங்கா புள்ள குட்டிங்களே படிக்க வச்சிருந்தா இது போல இலவசத்திற்கு ஏன் அலயை வேண்டும் ? இருநூறு ரூபாய் வோட்டுக்கு இது தான் கிடைக்கும்.
மருந்தை தேடி அலயும் திட்டத்திலும் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பது தமிழர்களுக்கு பெருமைதான்.
கொள்ளையர்கள் ஆட்சியில் இதுயெல்லாம் கடத்தி தனியாரிடம் விற்க படுவதால் மக்கள் தனியாரிடம் வாங்கினால் தான் ஏதுவாய் இருக்கும். அப்போதானே ஸ்விட்சர்லாந்துல ஸ்காட்ச் கம்பனி வாங்க முடியும்....
வீடு தேடி மருத்துவம் வந்தால், அக்கம் பக்கத்தினர் நமக்கு என்ன வியாதி என்று நம்மை கேட்பார்கள். இந்த திட்டம் சரி இல்லை. மருத்துவம் இலவசம் ஆக்க பட வேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஸ்டாலினை தேடி மக்கள். அவர் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஓடும் மக்கள். இது தான் விடியல் அரசு. இப்படியே தான் காலத்தை ஓட்ட வேண்டும். அம்மா கிளினிக்கை மூட வாய்த்த ஆண்ட்ரே போராட்டம் செய்து இருந்தால் இந்த நிலை வருமா .