Load Image
Advertisement

தனியார் பால் விலை உயர்வால் ஆவின் பால் விற்பனை திடீர் அதிகரிப்பு

 தனியார் பால் விலை உயர்வால் ஆவின் பால் விற்பனை திடீர் அதிகரிப்பு
ADVERTISEMENT
சென்னை : தனியார் பால் விலை உயர்வு காரணமாக, ஆவின் பால் விற்பனை ஒரே வாரத்தில், 50 ஆயிரம் லிட்டர் திடீரென அதிகரித்துள்ளது.


மாநிலம் முழுதும் விவசாயிகளிடம் இருந்து, ஆவின் நிறுவனம் வாயிலாக, 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. நடப்பாண்டில் தனியார் நிறுவனங்கள், இரண்டு முறை பால் விலையை உயர்த்தின. பால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது, இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, வெண்ணெய், நெய் உள்ளிட்டவற்றிற்கு 12 சதவீதமும், தயிர், லஸ்ஸி, மோருக்கு ஐந்து சதவீதமும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது.
Latest Tamil News

தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஆவின் பால் விலை லிட்டருக்கு, மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால், பால் விற்பனை அதிகரித்தது. சென்னையில், 14 லட்சம் லிட்டர், மற்ற மாவட்டங்களில் 20 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது.


தற்போது, தனியார் பால் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், ஆவின் பால் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் 50 ஆயிரம் லிட்டர் விற்பனை அதிகரித்து உள்ளது. ஹோட்டல்கள், டீக்கடைகள், அரசு மற்றும் தனியார் அலுவலக கேன்டீன்களுக்கு அதிகளவில் ஆவின் பால் வாங்கப்படுகிறது.


வாசகர் கருத்து (9)

  • ஆரூர் ரங் -

    தனியார் அறிவிப்பு கொடுத்து விட்டு விலையை ஏற்றுகிறார்கள். ஆவின் சத்தமில்லாமல் பாலின் அளவில் விளையாடிவிடுகிறது. அத்துடன் 50 பைசா ஜிஎஸ்டி போட்டால் அதனைக் காரணம் காட்டி 🤪2 ரூபாயைப் பிடுங்கிவிடுகிறது. எப்படியும் நுகர்பவர்கள் ஏமாளிகள்தான்.

  • மதுமிதா -

    குழந்தைகள் முதியவர்கள் நோயாளிகள் நினைவில் கொள்ள வேண்டு மின்சார காமத்தை ஆவினில் காட்டாதீர்கள்

  • hari -

    நமக்கு வச்சான் பாரு ஆப்பு... ஹா ஹ்ஹ்ஹா

  • Muralidharan raghavan - coimbatore,இந்தியா

    ஆவின் சத்தமில்லாமல் அரை லிட்டர் தயிரின் விலையை ஆறு ருபாய் உயர்த்தியுள்ளது பலருக்கும் தெரியாது.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    பால் பாக்கெட்டில் கூட பிராடுத்தனம் செய்த ஒரே உராட்சி அரசு தமிழக அரசுதான். பொதுமக்கள் நுகர்வோர் நீதிமன்றம் சென்று ஆயிரக்கணக்கில் வழக்குகளை தொர்டர்ந்திருக்க வேண்டும். இன்று விலையை உயர்த்தி வில்லத்தனம் செய்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்