Load Image
dinamalar telegram
Advertisement

ராணுவத்தில் சேர விரும்பினேன்: ராஜ்நாத் சிங் சுவாரஸ்ய தகவல்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி :''ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே என் இளமைக் கால விருப்பமாக இருந்தது; அரசியலில் சேர விரும்பியது இல்லை,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

குடும்ப சூழ்நிலை



நம் ராணுவத்தில் உள்ள அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் பேசியதாவது:என் இளமைக் காலத்தில் ராணுவத்தில் இணைந்து, நாட்டுக்காக சேவை செய்ய விரும்பினேன். அது தான் என் லட்சியமாக இருந்தது. என் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த ஆசை நிறைவேறவில்லை. என் தந்தை காலமாகி விட்டதால், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற என் விருப்பத்தை நிறைவேற்ற
முடியவில்லை. அரசியலுக்கு வருவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை; அது, என் ஆசையாகவும் இருந்தது இல்லை. ராணுவ சீருடையில் ஒரு கவர்ச்சி உள்ளது. ஒரு குழந்தையிடம் ராணுவ சீருடையை கொடுத்துப் பாருங்கள்; அந்த குழந்தைக்கு ஆளுமைத் திறன் வந்து விடும்.

Latest Tamil News

நன்றிக் கடன்



சமீபத்தில் சீன படைக்கும், நம் ராணுவத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது என்ன நடந்தது என்ற விபரமான தகவல் உங்களில் பலருக்கும் தெரியாது. ஆனால், நம் வீரர்கள் அந்த சமயத்தில் எவ்வளவு வீரத்துடன் சண்டையிட்டனர் என்பது எனக்கும், நம் ராணுவ அதிகாரிகளுக்கும் தான் தெரியும். ராணுவத்தினருக்கு நாட்டு மக்கள் எப்போதும் நன்றிக் கடன் பட்டுள்ளனர்.
நான் எங்கு சென்றாலும், ராணுவ வீரர்களை சந்திப்பேன். நான் மணிப்பூர் செல்ல திட்டமிட்டபோது, அசாம் ரைபிள்ஸ் படையினருடன் பேச வேண்டும் என, ராணுவ தளபதியிடம் கூறினேன்; ராணுவ வீரர்களை சந்திப்பது எனக்கு பெருமை அளிக்கிறது.
டாக்டர்களும், இன்ஜினியர்களும் இந்த நாட்டுக்காக ஏதோ ஒரு வகையில் சேவை செய்கின்றனர். ஆனால், ராணுவத்தினர் ஆற்றும் சேவை எல்லாவற்றையும் விட மிகவும் உயர்ந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement