Load Image
Advertisement

விசாரணை நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

 விசாரணை நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
ADVERTISEMENT
புதுடில்லி :'வழக்கின் விசாரணையை நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்காமல் பார்த்துக் கொள்வது, விசாரணை நீதிமன்றங்களின் கடமை' என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்துாரில் மேயராக இருந்தவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் தப்பிக்க உதவி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.


இவர் ஏழு ஆண்டுகளாக சிறையில் உள்ளார். ஆனால், இவரிடம் இன்னும் விசாரணை நடத்தப் பட வில்லை. இதையடுத்து அவர், ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இன்று (ஆக.19) விசாரணைக்கு வந்தது.

Latest Tamil News
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகளாகியும், கைது செய்யப்பட்ட நபரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது. விசாரணையை தாமதிப்பது, பல பிரச்னைக்கு வழிவகுத்து விடும்.எந்த ஒரு வழக்கின் விசாரணையையும் நீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது விசாரணை நீதிமன்றங்களின் கடமை.

இந்த வழக்கில் ஒரு ஆண்டு காலத்துக்குள் தீர்ப்பு அளிக்கப்படுவதை விசாரணை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் இருந்த காலத்தை கருதி, அவருக்கு ஜாமின் வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


வாசகர் கருத்து (3)

  • jss -

    ஐய்யா உங்கள் நீதிமன்றத்தில தேங்கியிருக்கு வழக்குகளை ஒரே வருடத்தில் முடிக்க நடவடிக்கை எடுங்கள் சாமி. பிறகு மற்ற நீதி மன்றங்களுக்கு உத்தரவிடலாம். உங்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு வேறொன்றா.

  • Dharmavaan - Chennai,இந்தியா

    இங்கு ஆறுமுகசாமி கமிஷன் பற்றி உச்ச நீதி என்ன சொல்லும்.

  • John Miller - Hamilton,பெர்முடா

    அறிவுரை எல்லாம் அடுத்தவனுக்குத்தான். காசா, பணமா சும்மா அள்ளிவிடுங்கள் சாமி. அதெற்குமுன் உங்கள் நிலை என்ன என்பதற்கு சில உதாரணம் பார்ப்போமா. அப்பாவு எம் எல் ஏ வழக்கில் விசாரணை எல்லாம் முடிந்து உட்சா நிதி மன்றத்தில் தீர்ப்பு ஓத்து வைக்கப்பட்டு எதனை வருடங்கள் ஆகின்றன என்பது ஒங்களுக்கு தெரியுமா? பன்னீர் குரூப் எம் எல் ஈக்கள் வழக்கு விசாரிக்க பட்டு எதனை வருடங்கள் ஆகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? நாலாயிரத்து ஐந்நூறு கோடிகள் எடப்பாடி கொள்ளை அடித்த வழக்கில் திரும்பவும் நீயே விசாரி என உயர் நீதி மன்றத்திற்கு சொல்ல நீங்கள் நான்கு முழு வருடங்கள் எடுத்துக்கொண்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்