Load Image
Advertisement

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் 50 மொபைல் போன்கள் பறிமுதல்

 திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் 50 மொபைல் போன்கள் பறிமுதல்
ADVERTISEMENT
திருச்சி : திருச்சி, மத்திய சிறை சிறப்பு முகாமில், காலையில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், 50 மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர்.


திருச்சி மத்திய சிறை வளாகத்தில் செயல்படும் சிறப்பு முகாமில், போலி பாஸ்போர்ட், விசா காலம் முடிந்தும் சொந்த நாடுகளுக்கு திரும்பாதது போன்ற குற்ற செயல்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்ட வெளி நாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உறவினர்களை சந்திக்கவும், முகாமிலேயே சமையல் செய்து சாப்பிடவும் இவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போதை பொருள் புழக்கத்தில் விடுபவர்களுடன் தொடர்பு போன்ற சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த மாதம், என்.ஐ.ஏ., அதிகாரிகளும், அமலாக்கத் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர்.


இந்நிலையில், இன்று அதிகாலையில், 3 போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில், 300க்கும் மேற்பட்ட போலீசார், மத்திய சிறை சிறப்பு முகாமில், அதிரடி சோதனை நடத்தினர். இன்று அதிகாலை 4:00 மணி முதல் காலை 11:00 மணி வரை சோதனை நடத்திய போலீசார், 50 மொபைல் போன்களை பறிமுதல் செய்து, அந்த போன்களில் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து (2)

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    எல்லாமே எங்கும் தடையின்று கிடைக்கிறது, எங்கும் எதையும் எப்போதும் எந்த நேரத்திலும் எதையும் சாதித்துக்காட்டும் திறமைமிக்க மாண்புமிகுக்கள் அடைக்கலம் பெரும் பாதுகாப்பான ஒரே இடம் என்பதால் இப்படித்தான் இருக்கும், இவர்கள் கைகளில்தான் இன்றைய ஜனநாயகம் இருக்கிறது. ஆகவே இவர்களை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு வரி கட்டுபவர்களுக்கும் உள்ளது, வந்தே மாதரம்

  • Fastrack - Redmond,இந்தியா

    அரசாங்கமே டெலிபோன் பூத் அமைத்து பேச அனுமதி வழங்கலாம் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement