Load Image
dinamalar telegram
Advertisement

தமிழகத்தில் ‛பவர் கட் வராது... வரவே வராது!:சத்தியம் செய்யுது மின்வாரியம்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,100 கோடி பாக்கி வைத்ததற்காக தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மின்சாரம் வாங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் மின்விநியோகம் பாதிக்காது என மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேசன் கார்பரேசன் (போகோசோ-pocoso) செயல்படுகிறது.இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழகம், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்கள் ரூ.5,100 கோடி பாக்கி வைத்துள்ளன. தெலுங்கானா ரூ.1,380 கோடியும், தமிழகம் ரூ.926.16 கோடியும் பாக்கி வைத்துள்ளது. மின்சார சட்ட திருத்தத்தின்படி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், காலக்கெடு முடிந்துவிட்டதால், பாக்கி வைத்துள்ள மாநிலங்கள் மின்சாரம் வாங்கவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காற்றாலை மின்சார உற்பத்தி முடிவுக்கு வரும் நேரத்தில் இந்த தடை விதிக்கப்பட்டதால், மின்சார பற்றாக்குறை ஏற்படவும், மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் ஏற்பட்டது.
Latest Tamil News
தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.926 கோடியில் ரூ.700 கோடி செலுத்தப்பட்டு விட்டது. நிலுவ தொகை ரூ.226 கோடி மட்டும் தான் செலுத்த வேண்டி உள்ளது. மின் தேவைக்கு ஏற்ப தான் மின்சாரம் வாங்கப்படுகிறது. அக்., வரை மின் தேவை பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை. மின் விநியோகம் பாதிக்கப்படாது எனக்கூறியுள்ளது.


வாசகர் கருத்து (34)

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    அதாவது முதல்வர் வீட்டிலும் மக்கி போன் மந்திரிகள் வீட்டில் மட்டும் மின்சாரம் எப்போதும் இருக்கும். ஆனால் மக்களாகிய எண்கள் வீட்டில் வோட்டு போட்ட பாவத்திற்கு மின்சாரம் கேட் பண்ணி தான் வரும். இது எண்கள் முதல்வர் மேல் சத்தியம். இப்படிக்கு மின்சாரவாரியம்.

  • Balaji - chennai,இந்தியா

    நமக்கு ஓசி கரண்ட் குடுக்க மறுத்த ஒன்றிய அரசு ஒழிக. இது தன் அடுத்த கோஷம் correct-ஆ sir.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஆனால் கூடிய சீக்கிரம் மக்களை ஏமாற்றி ஆட்சி புரியும் இந்த திமுகவின் 'பவர்' போகப்போவது திண்ணம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்