Load Image
dinamalar telegram
Advertisement

ஹிந்துக்கள் பற்றி சர்ச்சை: லியோனி மீது போலீசில் புகார்

Tamil News
ADVERTISEMENT
சென்னை : ஹிந்துக்கள் மனம் புண்படும்படி சர்ச்சையாக பேசிய தி.மு.க. பேச்சாளர் லியோனி மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் பாரத் ஹிந்து முன்னணி என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் மாநில செயலர் டில்லி பாபு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:சென்னை கலைவாணர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழா நடந்தது. அதில் லியோனி பேசினார்.
Latest Tamil News அப்போது ஹிந்துக்கள் யாகம் வளர்க்கும் முறை குறித்தும் கல்லையும் கடவுளாக வணங்குவது குறித்தும் அவதுாறாக பேசியுள்ளார். ஹிந்துக்களின் யாகம் மிகவும் புனிதமானது; சக்தி வாய்ந்ததாக ஹிந்துக்கள் கருதுகின்றனர்; கல்லையும் கடவுளாக வணங்கும் ஒரே மதம் ஹிந்து மதம்.

எனவே ஹிந்துக்களின் மனதை மிகவும் கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ள லியோனி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தற்போது பதவி வகித்து வரும் பாடநுால்கழக தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (149)

  • Godyes - Chennai,இந்தியா

    லியோனி அப்பா சிவ சங்கரன் தாத்தா ராமகிருஷ்ணன். பாட்டி அலமேலு

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    கனல் கண்ணனை கைது செய்வதில் காட்டிய முனைப்பை காவல் துறை இதில் காட்டும் என்று எதிர்பார்க்கலாமா?

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    லி.யோனி தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் தலைவராம் விளங்கிடும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்