செங்கல்பட்டு மாவட்டம் மாம்மல்புரம் அடுத்துள்ள பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த அஸ்வினி 'எங்கள் வீட்டிற்கு முதல்வர் வந்தார். எங்களுக்கு வீடு தருவதாகவும் 12 பேருக்கு தலா 1 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாகவும் தெரிவித்தார். ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் கடன் வழங்கவில்லை' என தெரிவித்துள்ளார். அந்த பெண் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை: விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் தி.மு.க. அரசு தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை; தேர்தலுக்கு பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறது. இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா தமிழக முதல்வரே?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (56)
திரு.மோடி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஹிந்தியில் பேசும் போது வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டுவந்தால் தலைக்கு பதினைந்து லட்சம் போடலாம் என்று தான் சொன்னார், பதினைந்து லட்சம் போடுவேன் என்று எங்கும் சொல்லவில்லை திராவிட பொய் செய்திபரப்பாளர்களே, வேலை வாய்ப்புகளை உருவாகும் கடமை மாநில அரசுக்கும் உள்ளது, தன் வேலைவாய்ப்பை தானே உருவாக்கி கொள்ள வேண்டும் மாணவ செல்வங்கள், அதை விடுத்தது அரசு வேலைவாய்ப்பை கொடுக்கும் என்று நினைத்தால் நூற்று மும்பது கோடி வாழும் நாட்டில் எப்படி சாத்தியம், இங்கு எல்லா வளமும் இருக்கு அதை பயன்படுத்தி வளமாக வாழ வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை, அதை விடுத்து அரசு வேலை கொடுக்கும் என்று நம்பினால் தினமும் நாம் உண்ணும் உணவுக்கு கூட பணம் இருக்காது, இங்கு கருத்து எழுதும் அனைவருக்கும் தெரியும், ஆனால் மத்திய அரசை குறை சொல்ல வேண்டும் என்று விஷம எண்ணத்தில் இருப்பார்கள், இளவயது நபர்கள் எதிர்மறை பேச்சை புறம் தள்ளி தங்கள் பொருளாதாரத்தை தாங்களே நிறுவ வேண்டும், சுதந்திரம் அடைவதெற்க்கு முன்பு இந்த நாட்டில் யாரும் பணக்காரன் கிடையாது,சிந்தனை செய்யுங்கள் நேர்மறை சிந்தனை செய்யுங்கள், செழிப்பாக வாழலாம்.
மதுரை திருமங்கலத்தில் நகராட்சியின் பத்து கோடி கடனுள்ளதால் இப்பொழுது சொத்துவரியை நூறு % உயர்த்தியுளார்கள், இந்த மாதிரியான வரிவசூல்கள் கடுமையாக அங்குள்ள மக்கள் வெறுக்கிறார்கள் நகராட்சியின் சர்வாதிகாரப் போக்கை கண்டு, மேலும் புதியதாக கட்டப்பட்ட வீடுகளுக்கு சொத்து வரியை போடுவதற்கு ரூபாய் பாத்து ஆயிரம் லஞ்சம் கேட்பதினால் யாரும் புதித்ய வீடுகளுக்கு சொத்து வரிக்கு விண்ணப்பிக்காமல் பல வீட்டின் உரிமையாளர்கள் மின்சார சப்ளை மட்டும் பெற்றுக்கொண்டு வீட்டில் வசிக்கிறார்கள் , நகராதிச்சியின் இந்த மாதிரியான லஞ்சம் வாங்கும் வேலைகளினால் தமிழக அரசுக்கு வரவேண்டிய வரி வருமானம் வரவிடமால் நகராட்சியின் நிர்வாகம் முட்டுக்கட்டை போடுகிறார்கள் , சுமார் ஆயிரம் வீடுகளுக்கு நகரஆட்சியின் சர்வாதிகாரப்போக்கால் சொத்து வரி கொடிக்கண்ணாக்கில் இழப்பு தமிழக அரசுக்கு . மேலும் மதுரை திருமங்கலம் நகராட்சியின் லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிர்வாக சீர்கேடு, தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல், அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -மதுரை திருமங்கலம் நகராட்சியில் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை, லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது, பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள் .கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் திருமங்கலம் நகராட்சியின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட டவுன் பிளானிங் அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் நகராட்சியின் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை திருமங்கலம் நகராட்சிக்கு
ஏமாற்று என்ற வார்த்தைக்கு திராவிட மாடலில் சமூகநீதி என்று பெயர். பித்தலாட்டம் என்பதற்கு சமத்துவம் என்று பெயர். திராவிட இலக்கணம் படித்தால்தான் இதெல்லாம் புரியும்.
வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவோம் என்று தேதி கொடுக்கவில்லை அப்புசாமி திராவிட தமிழர்களுக்கு கால் பிடிக்கும் வேலையே சிறப்பாக செய்கிறான்
0 …..