Load Image
dinamalar telegram
Advertisement

டிவி உரிமையாளர் எனஅள்ளி விட்ட சுகேஷ்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி : 'பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திரசேகர் தன்னை 'சன் டிவி' உரிமையாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்' என நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கூறினார்.

பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் நட்பில் இருந்த 'பாலிவுட்' நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜரானார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:Latest Tamil News
சுகேஷ் சந்திரசேகர் தன் பெயரை சேகர் ரத்ன வேலா என்றும், தன்னை சன் டிவி உரிமையாளர் மற்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மருமகன் என்றும் என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு பழகினார். அவரை சென்னையில் இரண்டு முறை மட்டுமே சந்தித்துள்ளேன். மற்றபடி ஆறு மாதங்களாக போனில் மட்டுமே பேசி பழகினேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான 'ரான்பாக்ஸி'யின் முன்னாள் இயக்குனர்களிடம் 215 கோடி ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் டில்லி போலீசார் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தவிர பல்வேறு மோசடி வழக்குகளும் சுகேஷ் மீது நிலுவையில் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (5)

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    எவனாவது எதையாயாவதை சொன்னால் நம்பி விடுவதா. படித்தும். அறிவு இல்லையா.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    இரண்டே முறை சந்தித்ததிலேயே பல கோடி கறந்துவிட்ட சாகசம் வியப்பானது....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இது போன்ற மொக்கையாக பொய் சொல்லுபவரளிடம் கூட ஏமாறும் அளவுக்கு மசாலா இருக்கிறது என்றால் அது மிக ஆபத்தானது.

  • Gopalakrishnan S -

    சன் டிவி உரிமையாளர் யார் என்று உலகமே அறியும். சன் டிவி உரிமையாளர் மற்றும் ஜெயலலிதா மருமகன் .... திரைநடிகைகள் அறிவுக்கூர்மை அபாரம் ! தினசரி செய்தித்தாள் படிப்பது கூட கிடையாதா ? இருமுறை சந்தித்ததற்கே ஐந்து கோடி ரூபாய் பரிசா ? நல்ல தொழில் !

    • Kasimani Baskaran - Singapore

      சுதந்திரம் வேண்டாம் என்று சொன்ன ஒரு ஏமாற்றுப்பேர்வளியின் படத்தை தமிழ்நாடு முழுவதும் ஊர்தியில் வைத்து உலவவிட்ட பொழுது ஒருவரும் எதிர்க்கவில்லையே.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்