மூடப்படும் அபாயத்தில் மினி சூப்பர் மார்க்கெட்
சென்னை:முறையான பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இல்லாததால், ரேஷன் கடைகளை ஒட்டி துவக்கப்பட்ட 'மினி சூப்பர் மார்க்கெட்' எனப்படும் சிறிய பல்பொருள் அங்காடிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளை நடத்துகின்றன. அவை முக்கிய பகுதிகளில் உள்ள, 100க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளை ஒட்டி, அம்மா மினி சூப்பர் மார்க்கெட்டுகளை, 2019 - 20ல் துவக்கின. அவற்றில் மளிகை, எண்ணெய் வகைகள் என, 300 வகையான பொருட்கள் விற்கப்பட்டன.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அம்மா மினி சூப்பர் மார்க்கெட்டு களில், 5 சதவீத தள்ளுபடி விலையில், பல வகை பொருட்கள் விற்கப்பட்டன. அதை விட, தனியார் அங்காடிகளில் அதிக தள்ளுபடி தரப்பட்டது. இதனால், மினி சூப்பர் மார்க்கெட் துவக்கிய சில மாதங்களிலேயே வாடிக்கையாளர்கள் வருவது குறைந்தது. தற்போது ஒரு கடையில் தினசரி, 5,000 ரூபாய்க்கு கூட வியாபாரம் நடப்பதில்லை. அவற்றை மேம்படுத்தி, விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது, முறையான பராமரிப்பு இன்றியும், அதிக பொருட்கள் விற்கப்படாமலும் மினி சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்படுகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் வராததால் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அம்மா மினி சூப்பர் மார்க்கெட்டு களில், 5 சதவீத தள்ளுபடி விலையில், பல வகை பொருட்கள் விற்கப்பட்டன. அதை விட, தனியார் அங்காடிகளில் அதிக தள்ளுபடி தரப்பட்டது. இதனால், மினி சூப்பர் மார்க்கெட் துவக்கிய சில மாதங்களிலேயே வாடிக்கையாளர்கள் வருவது குறைந்தது. தற்போது ஒரு கடையில் தினசரி, 5,000 ரூபாய்க்கு கூட வியாபாரம் நடப்பதில்லை. அவற்றை மேம்படுத்தி, விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!