Load Image
Advertisement

கடற்கரையில் ஆயுதங்களுடன் ஒதுங்கிய மர்ம படகு: மஹா., வில் பாதுகாப்பு தீவிரம்

 கடற்கரையில் ஆயுதங்களுடன் ஒதுங்கிய மர்ம படகு: மஹா., வில் பாதுகாப்பு தீவிரம்
ADVERTISEMENT

ராய்காட்: மஹாராஷ்டிராவின் ராய்காட் பகுதியில் ஏகே 47 ரக துப்பாக்கிகளுடன் படகு கரை ஒதுங்கியது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், ஹரிஹரேஸ்வரர் கடற்கரை அருகே மர்ம படகு ஒன்று ஒதுங்கியது. அந்த படகில் யாரும் இல்லை. இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படை மற்றும் மஹாராஷ்டிரா கடற்கரை பாதுகாப்பு குழுவினர் படகை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் இருந்தன. அதனை கைப்பற்றிய அதிகாரிகள், படகில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest Tamil News

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி, தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கரை ஒதுங்கிய படகு ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டதாகவும், அதில் வந்தவர்கள், கடற்கரையில் நுழைந்தது குறித்து கடலோர காவல்படையிடம் தகவல் ஏதும் கூறவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
Latest Tamil News

இந்த படகு குறித்து விசாரணை நடத்த பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., கூறியுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் வினீத் அகர்வால் கூறுகையில், பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த படகு ஓமனில் பதிவு செய்துள்ளதாக தெரியவருகிறது என்றார்.

Latest Tamil News

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், இந்த படகு, கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும், நெப்டியூன் கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தது என தெரியவருவதாக தெரிவித்துள்ளன.

படகு கரை ஒதுங்கிய இடம் மும்பையில் இருந்து 200 கி.மீ., தொலைவிலும், புனேயில் இருந்து 170 கி.மீ., தொலைவிலும் உள்ளது.


வாசகர் கருத்து (7)

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    ஓமனில் பதிவு செஞ்ச படகாம்+++++++ஓமனில்சவூதியை ஒட்டியுள்ள அது என்ன நாடு தெரியுமோ -சரி++++அப்போ அதுல யாரு வந்துருக்க வாய்ப்பு இருக்கு? யோசிங்க மக்களே.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    சீனாவின் சதி செயலாக இருக்கும். அல்லது பாக்கிஸ்தான் சதி செயலாக கூட இருக்கலாம். அல்லது இரண்டு நாடுகளும் சேர்ந்து கூட்டுச்சதி செய்திருக்கலாம். எதற்கும், நமது வீரர்கள் கடலோரப்பகுதிகளில் அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அந்த படகில் வந்தவர்கள் யாருக்கும் எதுவும் ஆகியிருக்காது என்று நம்புவோம்

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    இனி எந்த கசாப்பு வந்தாலும் கசாப்புதான்னு பயங்கரவாதிகள தெளிவா எச்சரிச்சுடுங்க....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்