Load Image
dinamalar telegram
Advertisement

பாக்காதே...பாக்காதே....பெண்களை பாக்காதே...!: ஆண்களே! பஸ்களில் உஷார்...

Tamil News
ADVERTISEMENT
சென்னை: மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களை செய்து தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பஸ்சில் பயணிக்கும் ஆண் பயணி, பெண்களை முறைத்துப்பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக்கூடிய சைகை, பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல் கூடாது. நடத்துனர் எச்சரிக்கை விடுத்தப் பின், புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம்.Latest Tamil Newsபெண் பயணி வாகனத்தில் பயணிக்கும் போது, பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற கேள்விகள் கேட்கக்கூடாது. எந்தவொரு பயணிக்கும் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகள் கேட்கும்போது அந்த புகார் புத்தகத்தை அளிக்க வேண்டும். நடத்துனர் இல்லாத போது இவை ஓட்டுநரின் பொறுப்பு. இவ்வாறு தமிழக அரசு அரசிதழில் குறிப்பிட்டுள்ளது.


வாசகர் கருத்து (30)

  • ராஜா -

    ,,,,,

  • Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா

    எதோ ஆப்கானிஸ்தான் செய்தி என்று நான் தவறாக நினைத்து விட்டேன்.

  • பாஸ்கர் முத்துவேல் - ,

    நவீன காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும் சாதி மத இன வேறுபாடின்றி அனைவருக்குமான பொது சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

  • அன்பு - தஞ்சை,கனடா

    பெண்களை பார்ப்பது தவறல்ல. வேண்டுமென்று இல்லாமல், எதேச்சயாக பார்க்க நேரிட்டால், தலையை ஆட்டி, புன்னகை செய்யுங்கள். ஹாய் என்று சொல்லுங்கள். சகஜமாக இருங்கள். ஆனால் காணாத தின்பண்டத்தை பார்ப்பதுபோன்று உற்று பார்ப்பது தவறு. இந்திய ஆண்கள் இதை சகஜமாக இந்தியாவில் செய்துகொண்டு திரிகிறார்கள். வெளிநாட்டு பெண்கள் இந்திய ஆண்களை பற்றி முதல் குற்றம் சொல்வதே இதே தான். திருத்திக்கொள்வது நல்லது. பெண்கள் மனித இனத்தை சேர்ந்தவர்கள் தான். ஏதோ மானை பார்ப்பது போன்று பார்க்க வேண்டாம்.

    • Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா

      வெளிநாட்டு பெண்கள் நம் பெண்கள் போன்று ஒழுங்கன உடலை மூடிக்கொண்டு வருவதில்லையே

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    சாதுவாக இருக்கும் ஆண் பயணிகளைப்பார்த்து, பெண் பயணிகள் முறைத்துப்பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் போன்ற செயல்களை செய்தால், அப்படிப்பட்ட பெண் பயணிகளுக்கு இதே தண்டனை உண்டா? ஏன், எப்பொழுதும் ஆண்கள்மேல் உங்கள் "கண்"? சட்டம் என்பது இரு பாலாருக்கும் பொதுவாக இருக்கவேண்டும். என்ன சட்டம் இயற்றுகிறீர்களோ...???

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்