Load Image
dinamalar telegram
Advertisement

ஒன்றாக செயல்பட முடியாது: இபிஎஸ் புறக்கணிப்பு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: அதிமுக.,வுக்கு எதிராக பல பிரச்னைகளை செய்து, கட்சிக்கு விரோதமாக அநாகரிகமாக செயல்பட்டால் எப்படி இணைந்து செயல்பட முடியும் எனக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஓபிஎஸ்.,சின் அழைப்பை புறக்கணித்தார்.

ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்த நிலையில் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிராமத்தில் இருந்து நகரம் வரை அதிமுக பிரதான கட்சியாக திகழ்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுக என்ற அற்புதமான இயக்கத்தை தோற்றுவித்துள்ளனர். இந்த இயக்கத்தை சிலர் தன்வசம் கொண்டுபோக முயற்சித்ததே இன்றைய நிலைக்கு காரணம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டாக பிரிந்த நிலையில், ஓபிஎஸ்.,ம் நானும் ஒன்றாக சேர்ந்தோம்.

அவர் இணைந்தபோது பொதுச்செயலாளருக்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கட்சி விதிகளை இயற்றவோ, மாற்றவோ பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதன்படி, பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதால், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானது. 2,663 பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தேர்தலில் நின்று வெற்றிப்பெற்றவர்கள். பொது உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்.

ஒற்றை தலைமை குறித்து ஆலோசனைLatest Tamil Newsஜூன் 23ல் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் என ஓபிஎஸ்.,ம் நானும் இணைந்து அழைப்பு விடுத்தோம். அதில், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றை தலைமை வேண்டும் என கோரிக்கை விடுத்தினர். அதன் அடிப்படையில் ஓபிஎஸ்.,சிடம் 15 நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே போலீசுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்காமல் கட்சி பொதுக்குழுவுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளரே வழக்கு போடுகிறார். இது எந்த அளவிற்கு நியாயம்? ஓபிஎஸ் தரப்பினர்கள் எதிரிகள் அல்ல, பிரிந்து நிற்கின்றவர்கள்.

ஓபிஎஸ்க்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பதற்காக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஓபிஎஸ்.,க்கும், அவரது குடும்பத்தினருக்கும் பதவி வேண்டும் என்பதற்காக அடிக்கடி அழைப்பு விடுப்பது வாடிக்கை. அவரிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை. அவர் பதவி வேண்டும் எனில் தர்மயுத்தம் நடத்துவார். பிறகு அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுப்பார். பதவி கிடைப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணிவார். சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர், அவருக்கே அழைப்பு விடுப்பது சரியா?
Latest Tamil News

எப்படி இணைய முடியும்?பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்து, அவருக்கான இருக்கை போடப்பட்டும் அதில் பங்கேற்காமல், நீதிமன்றத்தை நாடுகிறார், கட்சியின் தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்குகிறார். ஆவணங்களை திருடி சென்றுள்ளனர். இப்படி கட்சிக்கு விரோதமாக அநாகரிகமாக செயல்பட்டால் எப்படி இணைந்து செயல்பட முடியும்? அவரால் தான் அதிமுக ஆட்சி பறிபோனது. முதல்வர் வேட்பாளர் தேர்வின் போதும், எதிர்க்கட்சி தலைவர் தேர்வின் போதும், ஒற்றை தலைமை விவகாரத்தின் போதும் என ஒவ்வொரு முறையும் அவர் பிரச்னை செய்தார்.

திமுக.,வுடன் தொடர்புநான் இல்லையென்றாலும், வேறு யாராவது கட்சி பதவியில் இருப்பர். ஆனால் கட்சியின் விதிகளை மதிக்க வேண்டும். எனக்கு எந்த பதவியின் மேலும் ஆசையில்லை. படிப்படியாக முன்னறியவன் நான். திமுக.,வுடன் பன்னீர்செல்வம் தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதை அதிமுக.,வினர் எப்படி ஏற்பார்கள்? கட்சிக்கு சோதனை வந்தபோதெல்லாம் நாங்கள் தான் முன்நின்றோம், ஓபிஎஸ் நிற்கவில்லை. ஜெயலலிதாவுக்கு உண்மையான விசுவாசிகளாக இருந்தவர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். ஜூன் 23, ஜூலை 11ல் நடந்த பொதுக்குழுக்கள் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் கூட்டப்பட்டது.

நீதிபதி அவரது கருத்தை கூறியுள்ளார். நாங்கள் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளோம். போடியில் 1989 ஜெயலலிதா வேட்பாளராக நின்றிருந்தபோது, அவரை எதிர்த்த வேட்பாளருக்காக பிரசாரம் செய்தவர் ஓபிஎஸ். தொண்டர்களிடம் செல்வாக்கு உள்ளது எனில் பொதுக்குழுவில் நிரூபித்திருக்க வேண்டியது தானே!. இவ்வாறு அவர் கூறினார். பழனிசாமியின் இந்த பேட்டியின் மூலம், ஓபிஎஸ்.,சின் அழைப்பை இபிஎஸ் தரப்பு புறக்கணித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (34)

 • Mrs. Marie-Thérèse Evariste - Paris,பிரான்ஸ்

  if EPS wants and if EPS files an "objection" in the Supreme Court against yesterday's High Court's verdict, how can his supporters conduct / on what basis will they conduct a "reunion" within 30 days even if the required 1/5th members are avalable ? They have to wait for the Supreme Court's verdict, isn't it ? Perhaps, might boulverse everything upside down also ......

 • T S Surendranath - Chennai,இந்தியா

  In the hearing posted on monday 22nd aug 22, no wonder if the judgement is delivered maintaining status quo favouring sasikala as the general secretary thus abolishing the post of co ordinator and sub co cordinator. then only this eps will disappear from admk. EPS is the only reason for this confusion as he prefers to dominate admk. another possibility is eps may be convicted and all problems will be solved. best solution is to conduct election to elect the best leader to lead admk by primary members under the supervision of court. let all the three compete i.e. sasikala, OPS and eps. this will solve all the problems. court may decide in this best way.

 • sankaseshan - mumbai,இந்தியா

  EPS OPS இருவருக்கும் பதவி பித்து தலையில் ஏறிவிட்டது ஆட்டம் போடுறார்கள் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி இல்லையெனில் தோல்வி

 • Muga Kannadi - chennai,இந்தியா

  சொல்றார் கேட்டுக்கோங்க

 • ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா

  யாரும் பிஜேபி கட்சிக்கு பல்லக்கு தூக்க வேண்டாம் மேலும் தமிழ்நாடு மக்கள் ஓட்டு ஒன்றும் பிஜேபி கட்சிக்கு போடவில்லை ஒரு சீட் கூட இல்லை, அவர்களை விமரிசனம் செய்ய எந்த தகுதியும் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கு உரிமை இல்லை.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்