Load Image
dinamalar telegram
Advertisement

4 வாரங்களில் கொரோனா இறப்பு விகிதம் 35% ஆக உயர்வு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் இணையதளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது: ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 15 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 வாரங்களில் இறப்புவிகிதம் 35% அதிகரித்துள்ளது.நாம் எல்லோரும் கொரோனா பெருந்தொற்று காலம் நீண்டு கொண்டே செல்வதால் சோர்வடைந்துள்ளோம். ஆனால் வைரஸ் சோர்வடையவில்லை. அதனால், நாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடக் கூடாது.Latest Tamil Newsநீங்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் உடனே தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுமட்டுமின்றி இரண்டு தவணை செலுத்தி இருந்தாலும், பூஸ்டர் டோஸ் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். முகக்கவசம், சமூக இடைவெளியை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் 15 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (3)

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    இந்திய பாரம்பரிய மருந்துகளை அதுவும் குறைந்த விலைகளில் அரசாங்கமே விற்கமுன்வரவேண்டும், குறிப்பாக ஆங்கில மருத்துவர்களே சித்தா மருந்துகளை எடுத்துக்கொண்டு பூரண குணம் அடைந்து இருக்கிறார்கள், இதுதான் உண்மை, ஆங்கில மருந்து அனைத்துமே எல்லோருக்குமே பொருந்தும் என்பது உறுதியானது அல்ல, அதே நேரத்தில் இந்திய பாரம்பரிய மருந்துகள் தரமான மருத்துவர்களால் கொடுக்கப்பட்டால் அது பின்விளைவுகளை உண்டாக்காது குறிப்பாக உயிர் போகாது. இறந்தவர்கள் பலர் எப்படி இறந்தார் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கேட்டால் தெரியும், உண்மையை கூற யாரும் தயங்கக்கூடாது. அதே நேரத்தில் அறுவை சிகிச்சை மற்றும் முதலுதவி என்றால் ஆங்கில மருத்துவத்துக்கு இணை எதுவும் இல்லை, இந்த குறிப்பிட்ட கொரோனா ... உலகறியும், வந்தே மாதரம்

  • முருகன் -

    பூச்சாண்டி காட்ட வந்து விட்டார்

  • மணி - புதுகை,இந்தியா

    மக்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. இனி பருப்பு வேகாது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement