Load Image
dinamalar telegram
Advertisement

புதிய ஐந்து துணை மின் நிலையங்கள் சேவை துவங்கியது

Tamil News
ADVERTISEMENT
தேனி -மின் நுகர்வோர் சிரமங்களை குறைக்கவும், தொடர் மின் வினியோகத்தை உறுதிப்படுத்தவும் மாவட்டத்தில் ரூ.75 கோடியில் 5 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ரூ.25 கோடியில் 12 துணை மின் நிலையங்களில் திறன்கள் அதிகரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. மாவட்டத்தில் மக்கள் தொகை, குடியிருப்புக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தடையின்றி மின்சாரம் வழங்க வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் தற்போது 17 துணை மின் நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் நுகர்வோர் பயனடைகின்றனர்.

இந்நிலையில் காமயக்கவுண்டன்பட்டி, தேவதானபட்டி, வருஷநாடு, கூடலுார், ஜெயமங்கலம் ஆகிய ஊர்களில் ரூ.75 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைத்து பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும் உத்தமபாளையத்தில் 2, பெரியகுளம் 2, வீரபாண்டி, மார்க்கையன்கோட்டை, காமாட்சிபுரம், போடி, க.விலக்கு ஆண்டிபட்டி உட்பட 12 துணை மின் நிலையங்களில் ரூ.25 கோடியில் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛புதிய துணை மின் நிலையங்கள் நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 12 துணை மின் நிலைய வினியோக திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வினியோகம் தங்குதடையின்றி கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.', என்றார்.


வாசகர் கருத்து (1)

  • duruvasar - indraprastham,இந்தியா

    அப்போ இனி தமிழ்நாடு நிரந்தர முதல் மின்மிகு மாநிலமாக மாறிவிடும் என எடுத்துக்கொள்ளலாமா ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement