Load Image
dinamalar telegram
Advertisement

வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி படுகொலை:9 பேர் கைது

Tamil News
ADVERTISEMENT
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் முன்விரோத தகராறு காரணமாக நேற்று நள்ளிரவு முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்தவர் ரவி மகன் கண்ணன்.31. கூலி தொழிலாளியான இவர் முன்னாள் வன்னியர் சங்கநகர செயலாளர். இவருக்கும் கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவன் என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு இலை எடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது குறிப்பு கதிரவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்ந்து கண்ணன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துவிட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுதலை ஆகி வந்துள்ளார். இருந்த போதிலும் இருவருக்கும் இடையே முன்விரோதம் தொடர்ந்துள்ளது.



இந்நிலையில் நேற்று நள்ளிரவு கண்ணன் பீடா வாங்குவதற்காக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து விட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரிடம் பேச்சுக் கொடுத்து வந்த சிலர் கலைஞர் காலனி பகுதி வந்தவுடன், அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து சரமாரியாக கண்ணனை வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் தலை மற்றும் மார்புப் பகுதியில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி. வசந்த ராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் கொலை வழக்குப் பதிந்து அதில் ஈடுபட்ட 12 பேர் அடங்கிய கும்பலை தேடி வருகின்றனர். முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை நகரம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு மேலும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கைது



மயிலாடுதுறை டிஎஸ்பி. வசந்த் ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட கதிரவன், சேது, சந்தோஷ், ரஞ்சித், முருகவேல், கார்த்திக், குணசேகரன், துரை, பிரபாகரன் ஆகிய 9 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். எஞ்சிய நபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பதற்றத்தை தணிக்க மயிலாடுதுறை நகர் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement