Load Image
Advertisement

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஊக்கத்தொகை நிறுத்தம்  

சிவகங்கை:தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு மே முதல் ஊக்கத்தொகை வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுஆன்லைனில் பாடம் நடத்தினர். இதனால் பல குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதித்தது. அவற்றை களையும் பொருட்டு 2021 அக்.,ல் இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வீடு தேடி சென்று தன்னார்வலர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.

இதற்காக மாநில அளவில் 11,000 தன்னார்வலர்கள் நியமித்து, மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தன்னார்வலர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.தன்னார்வலர்கள் கூறியதாவது: சேவை நோக்கில் தான் இப்பணியை செய்கிறோம். இருந்தாலும், அரசு உறுதியளித்த ஊக்கத்தொகையை மே மாதத்தில் இருந்து வழங்கவில்லை. அவற்றை குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது நியாயமல்ல, என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement