ADVERTISEMENT
புதுடில்லி: விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் கூறியதாவது: 3லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்கப்படும். ரிசர்வ் வங்கி வட்டி விதங்களை அதிகரித்துள்ளது. எனவே இந்த ஆண்டு வட்டிக்கு மானியம் வழங்கப்படும்.

விவசாயத்துறையில் அதிகளவு கடன் தரும் நோக்கில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், கால்நடை விவசாயிகளுக்கும் இந்த மானியம் கிடைக்கும். விவசாயிகளுக்கு வட்டி மானியத்துக்கு ரூ.34,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான மானியங்களும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (6)
டைரக்ட் கொத்தடிமைகளும், முன்களம் வாயிலாக கொத்தடிமை மாணவர்களும் கவனிக்க: ஒரு தேர்தல் இல்ல, ஒரு பந்தா இல்ல..ஆனா இப்படி ஒரு முடிவு. இதுக்கு எப்புடி எதிர்ப்பு தெரிவிக்கிறதுன்னு சீக்கிரம் யோசிங்க பாப்போம்...
இது மாதிரி லஞ்சம்.குடுத்தா அது இலவசமாகாதா யுவர் ஆனர்?
ஸ்டிக்கர் பிரிண்ட் ஆர்டர் ரெடியா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இலவசம்தான் கூடாது ஜென்ம எதிரிகள் விவசாயிகளுக்கு மானியம்